செய்திகள் :

பழங்குடியினர் தினம்: ``காடுகளிலிருந்து வெளியேற்றபடும் பழங்குடிகள் வாழ்க்கை'' -ஆய்வறிக்கை சொல்வதென்ன?

post image

பழங்குடி மக்கள் குறித்த போதுமான ஆய்வுகள் இன்னமும் செய்யபடவில்லை. அழிந்து வரும் நிலையில் பல பழங்குடி சமூகங்கள் இருக்கின்றன. காடுகள் அழிப்பு, நகரமயமாதல் போன்ற காரணங்களால் காடுகளிலிருந்து வெளியேற்றபடும் பழங்குடி சமூகங்கள் அடையாளமிழந்து காலபோக்கில் காணமால் போகின்றன.

பழங்குடி சமூகங்களை பாதுகாப்பதற்கும் அவர்களை முன்னேற்றுவதற்கும் திட்டங்களை கொண்டு வரும் நிலையில், அந்த சமூகங்கள் குறித்த ஆய்வுகளிலும் ஈடுபடுவது முக்கியம்.

குறிப்பாக ஒரு மாவட்டத்தில் வசிக்க கூடிய பழங்குடி சமூகங்களை பற்றிய தலவல்களை திரட்டினாலே போதுமானது. தேனி மாவட்டம் முழிவதுமே அதிக அளவில் உள்ள பழங்குடி சமூகங்கள் குறித்த ஒரு ஆய்வு வெளிவந்துள்ளது. ரம்யா ,சிவ செல்வி, கெளசல்யா, மகேஷ்வரன் ஆகியோர் இணைந்து பழங்குடியினரின் பாரம்பர்ய நடை என்ற பெயரில் தேனியில் இருக்ககூடிய பழங்குடி மக்களுடைய தகவல்களை தொகுத்து வெளியிட்டு இருக்கிறார்கள்.

அதில் தெரிவித்திருப்பதாவது, "தமிழ்நாட்டில் மொத்தம் 36 பிரிவு பழங்குடியினர் வசிக்கின்றனர். தேனி மாவட்டத்தில் பெரும்பாலும் ஆன்டிப்பட்டி, பெரியகுளம், போடிநாயக்கனூர் மற்றும் கடமலைக்குண்டு பகுதிகளில் பழங்குடியினர்கள் அடர்த்தியாக வசித்து வருகின்றனர். தேனியில் முதுவர் மற்றும் பளியர் என இரண்டு வகை பழங்குடிகள் உள்ளனர்.

முதுவாக்குடி

போடிநாயக்கனூரில் உள்ள முதுவாக்குடி என்ற பகுதியில் முதுவயின பழங்குடியினர்கள் வாழ்கின்றனர். தங்களின் குழந்தைகளை முதுகில் சுமந்து கொண்டு செல்வதனால் முதுவர் என்றும் வாழும் இடத்தை குடி என்று அழைப்பதால் முதுவர்கள் வசிக்கும் பகுதியை 'முதுவாக்குடி' என்று பெயரில் அழைக்கபப்டுகிறது.

முதுவர்கள் அவர்களுடய குடித்தலைவரின் உத்தரவுக்கு கட்டுபட்டு நடப்பார்கள். பெரும்பாலும் மலையாளம் கலந்த த

மிழில் தான் பேசுகிறார்கள். கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் தான் அதிகமான முதுவர்கள் வாழ்கின்றனர். அங்கிருக்கும் முதுவர்களுடன் திருமணம் செய்யும் பழக்கம் இன்னமும் இருக்கிறது.

தேனியை பொறுத்தவரை முதுவர்களை விட பளியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. குறிப்பாக போடிநாயக்கனூர், ஆண்டிப்பட்டி, பெரியகுளம் மற்றும் கடமலைக்குண்டு போன்ற வட்டாரத்தில் அதிக அளவில் இருக்கின்றனர்.

இரு பழங்குடிகளுக்கும் வனத்தில் கிடைக்கும் கிழங்கு தான் உணவு தற்போது இது அரிசி உணவையும் எடுத்து கொள்கின்றனர். கல்வி ரீதியாக இரு சமூகங்களுமே பின்தங்கிய நிலையில் இருக்கின்றனர். குழந்தைகளை படிக்க வைக்க முதுவர் பழங்குடிகளுக்கென்று ஆரம்பபள்ளியும் நடத்தப்படுகிறது.

பாரம்பரிய முறைப்படி தங்களுக்கு தேவையான மூலிகைப்பொடி மற்றும் எண்ணெய் போன்றவைகளை அவர்களே தயாரித்துக் கொள்கிறார்கள்.

வனப் பொருள்கள் சேகரிப்பிலும் ஈடுபடுகின்றனர். ஆக் ஈச்சமாரு, கல் பாசம் மற்றும் மரம் பாசம், பேக்குடல், நெல்லி, மாகாளிக்கிழங்கு, தேன் போன்ற பொருள்களை அதிக அளவில் சேகரித்து விற்பனை செய்து வருகின்றனர். மேலும் மிக அதிக அளவில் பச்சை ஈச்சமாரை வனங்களில் சேகரித்து வெயிலில் உலர்த்தி கட்டு கட்டாக கட்டி மொத்த வியாபாரியிடம் விற்பனை செய்கின்றனர்.

வனத்தில் கிடைக்கும் பொருள்களை தாண்டி தற்போது விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுட்டு வருகின்றனர். குறிப்பாக மிளகு, காப்பி, பீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்கு போன்ற பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.

வள்ளிக் கிழங்கு என்ற ஒரு வகைவகை கிழங்கை பளியர் மக்கள் போற்றி பாதுகாக்கினறனர். ஏனெனில் வள்ளி கிழங்கு பளியர்களின் தாய்கிழங்காகும். ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் கிழங்கை தோண்டி சாமிக்கு படைத்து திருவிழாவாக கொண்டாடுகின்றனர்.

அக்கிழங்கை அவர்களின் மக்களுக்கு மட்டும் வழங்கி உண்பது என்பது அவர்களின் பாரம்பரியமான செயலாகவும் இருக்கிறது. மிகவும் பிந்தங்கிய நிலையில் இருக்கும் இந்த இரு சமூகங்களையும் முன்னேற்றுவதற்கு அரசு திட்டங்கள் கொண்டு வந்தாலும் அவை முழுமையான முறையில் சென்றடைய விழிப்புணர்வு முகாம்கள் தொடங்க வேண்டும்.

குறிப்பாக திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கினால் இந்த மக்களின் வாழ்க்கை இன்னமும் மேம்படும். மேலும் ஒவ்வொரு ஆண்டும் பழங்குடியினர் தினத்தன்று மாவட்ட அளவிலான பாரம்பரிய திருவிழாக்கள் நடத்துவதன் மூலம் பழங்குடியினர்களின் உரிமைகள் மற்றும் பாரம்பரியத்தை இளைய தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்ல முடியும்". என்று ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

'ஜூலை 30' வாழ்வை விழுங்கிய நாளின் பெயரில் உணவகம் - 11 பேரை வயநாடு நிலச்சரிவில் இழந்தவர் சொல்வதென்ன?

நாட்டையே உலுக்கிய வயநாடு நிலச்சரிவு பேரழிவு ஏற்பட்டு நாளையுடன் ஓராண்டு நிறைவடைய இருக்கிறது. நினைத்துப் பார்த்தாலே நெஞ்சம் நடுங்கும் கோரமான இந்த நிலச்சரிவில் சிக்கி நூற்றுக்கணக்கானவர்கள் மண்ணில் புதைந்... மேலும் பார்க்க

மதுரை: `அரசு மருத்துவமனைக்கு வரும் 1000 பேருக்கு தினமும் மதிய உணவு!' - அசத்தும் நட்சத்திர நண்பர்கள்

அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழைகளுக்கு கடந்த 500 நாள்களாக தினமும் 1000 பேருக்கு மதிய உணவு வழங்கி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார் நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளையின் நிறுவனர் குருசாமி.நட்சத்திர நண்... மேலும் பார்க்க

``உலை கொதிக்கும் முன்னாடி வேலை வரும்; உழைப்பு தான்..'' - செருப்புத் தைக்கும் 75 வயசு பாட்டி

சென்னை ஆயிரம் விளக்கு சுரங்கப்பாதை பகுதியில், நான் எப்போதும் போல பூ வாங்குவதற்கு பூக்கடைக்கு சென்றிருந்தேன். எப்போதும் இருக்கும் பூ விற்க்கும் பாட்டி இன்று அங்கு இல்லை. என்னசெய்வதென்று தெரியாமல் அருகி... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: சாலையில் கிடந்த ஜல்லி கற்களை அகற்றி, பயணிகளுக்கு உதவிய போக்குவரத்து எஸ்.ஐ

மாவட்ட தலைநகரான ராமநாதபுரம் போக்குவரத்து காவல் துறையில் சார்பு ஆய்வாளராக பணியாற்றி வருபவர் விக்னேஷ்வரன். இவர் சாலை விதிகள் குறித்து பொது மக்களுக்கு அவ்வப்போது விழிப்புணர்வு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளா... மேலும் பார்க்க