மோசமான குற்றவாளி யார்? அதிர்ச்சியளிக்கும் எக்ஸ் தளத்தின் பதில்!
``தெரு நாய்களுக்கு ஆதரவாக மேம்போக்கான ஆதரங்களை முன்வைக்காதீர்கள்'' - உச்சநீதிமன்றம் கண்டனம்
டெல்லியில் 6 வயது குழந்தை தெரு நாய் கடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
டெல்லியில் தெரு நாய்கள் பிரச்சினை நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டது. அதிகரித்து வரும் நாய்க்கடி மற்றும் அதன் தாக்குதல் சம்பவங்கள் மக்களை கவலையடையச் செய்திருந்தன.

உச்ச நீதிமன்றம் இந்தப் பிரச்னையை மிகவும் தீவிரமாகக் கருதி, தானாக முன் வந்து இந்த வழக்கை விசாரித்தது.
10 லட்சம் தெரு நாய்களுக்கு கருத்தடை ஊசி போட்டு, அவற்றை காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்று தீர்பளித்திருந்தது.
உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பிற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள், நடிகர், நடிகைகள் உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இதனிடையே இந்த வழக்கை மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மாற்றி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் தெரு நாய் தொடர்பாக மீண்டும் வழக்கை விசாரித்த நீதிமன்றம், "தெரு நாய்களுக்கு ஆதரவாக மேம்போக்கான ஆதரங்களை முன்வைக்காதீர்கள்.
டெல்லி அரசின் செயலற்ற தன்மையால்தான் இந்த நிலைமை உருவாகி இருக்கிறது. தெருநாய்களைத் தடுக்க சட்டங்கள் உள்ளன. ஆனால் முறையாக அமல்படுத்தவில்லை" என்று தெரிவித்திருக்கிறது.