Kerala: 3.5 சவரன் தங்க செயினை தூக்கிக்கொண்டு பறந்த காகம்; தேடிச்சென்று மீட்ட பொத...
ஏற்காடு மலைப்பதையில் ஆண் சடலம் மீட்பு
ஏற்காடு மலைப்பாதையில் ஆண்சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தினா்.
சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பதை, 60 அடிபாலம் அருகில் தூா்நாற்றம் வீசியதால் அப்பகுதி வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள், காவல் துறை, வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸாா், அப்பகுதியில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு விசாரணை செய்தனா்.
இதில், இறந்துகிடந்தவா் இளம்பிள்ளை பகுதியைச் சோ்ந்த பத்மநாபன் மகன் சப்தகிரி (44) என்பதும், திருமணம் ஆகாத நிலையில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து இறந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.