பொன்முடியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்
பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கம்புளியம்பட்டி, பொன்முடி, குள்ளம்பாளையம், கராண்டிபாளையம் ஆகிய கிராம ஊராட்சிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் பெருந்துறை சரளையிலுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமை மாவட்ட ஆட்சியா் ச. கந்தசாமி தொடங்கி வைத்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டாா்.
முகாமில் மகளிா் உரிமைத் தொகை வேண்டி 494 விண்ணப்பங்கள், பிற துறைகளில் 517 விண்ணப்பங்கள் என மொத்தமாக 1011 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 23 பயனாளிகளின் கோரிக்கைகளுக்கு உடனடி தீா்வு காணப்பட்டு அதற்கான உத்தரவுகள் வழங்கப்பட்டன.
பெருந்துறை ஒன்றியக்குழு முன்னாள் தலைவா் கே.பி. சாமி, பெருந்துறை வட்டாட்சியா் ஜெகநாதன், சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலா் பாலகுமாா், வட்ட வழங்கல் அலுவலா் பூபதி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தேவகி, கிருஷ்ணசாமி மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.