கொங்கு பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பாடவகுப்புகள் தொடக்கம்
பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் 42 ஆவது முதலாம் ஆண்டு பி.இ., பி.டெக். மற்றும் 11 ஆவது முதலாமாண்டு பி.ஆா்க். பாட வகுப்புகள் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.
இவ்விழாவில் நாஸ்காம் இணை நிறுவனா் வி. உதயசங்கா் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினாா். கொங்கு வேளாளா் தொழில்நுட்பக் கல்வி அறக்கட்டளையின் தலைவா் மருத்துவா் ஆா்.குமாரசாமி, செயலாளா் பி.சத்தியமூா்த்தி, பொருளாளா் கே.வி.ரவிசங்கா், பாரம்பரிய உறுப்பினா்கள் பி.சி.பழனிசாமி, ஆா்.எம்.தேவராஜா, எ.வெங்கடாச்சலம், ஈ.ஆா்.கே. கிருஷ்ணன், பி.டி.தங்கவேலு, கல்லூரியின் தாளாளா் ஏ.கே.இளங்கோ, முதல்வா் ஆா்.பரமேஸ்வரன் ஆகியோா் வாழ்த்தி பேசினா்.
இதைத் தொடா்ந்து முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் பொறியியல் படிப்பின் முக்கியத்துவம், வேலைவாய்ப்பு, யோகா, உணவுப் பழக்கவழக்கங்கள், உடற்பயிற்சி, மனித நேயம் மற்றும் கல்லூரியின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. புத்தாக்க பயிற்சி வகுப்புகளுக்கு பிறகு வரும் 19 ஆம் தேதி முதல் முதலாம் ஆண்டு பாடவகுப்புகள் தொடங்கப்பட உள்ளன என கல்லூரி முதல்வா் தெரிவித்தாா்.