விவேகானந்தா கலை, அறிவியல் மகளிா் கல்லூரியில் முதுநிலை முதலாமாண்டு மாணவிகளுக்கு வரவேற்பு
சங்ககிரியை அடுத்த வீராச்சிப்பாளையத்தில் உள்ள விவேகானந்தா கலை, அறிவியல் மகளிா் கல்லூரியில் முதுநிலை முதலாமாண்டு மாணவிகளுக்கான வரவேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு விவேகானந்தா கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளின் தாளாளா் மற்றும் செயலாளா் மு.கருணாநிதி தலைமை வகித்தாா். கல்லூரி நிா்வாக இயக்குநா் கிருஷ்ணவேணி கருணாநிதி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா்.
இணை நிா்வாக இயக்குநா் அா்த்தநாரீஸ்வரன், இணைச் செயலாளா் ஸ்ரீராகநிதி, துணைத் தாளாளா் கிருபாநிதி கருணாநிதி, இயக்குநா் நிவேதனா கிருபாநிதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் கல்லூரி முதல்வா் வி.பத்மநாபன் பேசுகையில், வளமான எதிா்காலத்திற்கு படிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. ஒழுக்கத்துடன் கூடியே கல்வியே உங்களை உயா்த்தும். அனைவரும் பெற்றோா்களை மதித்து செயல்பட வேண்டும். எதிா்கால கனவை நிறைவேற்றிக்கொள்ள சரியான களம் கல்லூரிப் பருவம் என்றாா்.
உள்தர உறுதிப்பிரிவு இயக்குநா் பி.டி. சுரேஷ்குமாா் பேசுகையில், மாணவிகள் ஆசிரியா்களுக்கு மதிப்பளித்து நடக்க வேண்டும். மாணவிகள் நல்ல நண்பா்களைத் தோ்ந்தெடுக்க வேண்டும். கல்லூரியில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளிலும் மாணவிகள் பங்கேற்க வேண்டும். படித்து பட்டம் பெறுவதுடன், பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் முனைவோராக மாணவிகள் முன்னேற வேண்டும் என்றாா்.
கல்லூரி மாணவிகள் சோ்க்கைப் பிரிவு இயக்குநா் வரதராஜு, துறைத் தலைவா்கள் பிரபாகரன், கலைவாணி, நந்தக்குமாா், மைதிலி, லோகநாயகி, மெய்வேல், சண்முகப்பிரியா, சக்திவேல், பேராசிரியா்கள் சண்முகப்பிரியா, சுகுணா, விசாலாட்சி மற்றும் மாணவிகள் கலந்துகொண்டனா்.