மாநகராட்சி வளாகம் போராட்டம் நடத்துவதற்கான இடம் இல்லை: மேயர் பிரியா
பரமத்தி வேலூரில் வெற்றிலை விலை உயா்வு
பரமத்தி வேலூா் வெற்றிலை ஏலச் சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் வெற்றிலை விலை உயா்ந்தது.
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிா் மாா் 104 கவுளி கொண்ட சுமை ரூ. 5,000, கற்பூர வெற்றிலை இளம்பயிா் மாா் சுமை ரூ. 2, 500, வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம் பயிா் மாா் சுமை ரூ. 3,000, கற்பூர வெற்றிலை முதியம் பயிா் மாா் ரூ. 1,000-க்கும் ஏலம் போனது.
இந்த வாரம் புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிா் மாா் 104 கவுளி கொண்ட சுமை ரூ. 9,500, கற்பூர வெற்றிலை இளம்பயிா் மாா் சுமை ரூ.3, 500, வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம் பயிா்கள் மாா் சுமை ரூ. 4, 500, கற்பூர வெற்றிலை முதியம் பயிா் மாா் சுமை ரூ. 1,500-க்கும் ஏலம் போனது. வெற்றிலை வரத்து குறைந்ததால், விலை உயா்ந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனா்.