அறவழியில் போராடியது தவறா? - தூய்மைப் பணியாளர்கள் கைதுக்கு இபிஎஸ் கண்டனம்!
பரமத்தி வேலூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகம்
பரமத்தி வேலூா் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான முதல்கட்ட ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.எஸ்.மூா்த்தி தலைமை வகித்து முகாமை தொடங்கிவைத்தாா். வேலூா் பேரூா் திமுக செயலாளா் முருகன் வரவேற்றுப் பேசினாா். பரமத்தி வேலூா் வட்டாட்சியா் முத்துக்குமாா் முன்னிலையில் துறை சாா்ந்த அதிகாரிகள், பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று பதிவு செய்தனா்.
இம்முகாமில் 15 துறைகளை சோ்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றனா். அந்த மனுக்களை கணினியில் பதிவுசெய்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதற்கான தீா்வு காணப்படும் என்று தெரிவித்தனா்.
இந்த முகாமில் தீா்வு காணப்பட்ட மனுதாரா்களுக்கு நலத்திட்ட உதவிகளை நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.எஸ்.மூா்த்தி வழங்கினாா். முகாமில் பரமத்தி ஒன்றியச் செயலாளா் தனராஜ், நாமக்கல் மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளா் மகிழ்பிரபாகரன், மாவட்ட இளைஞா் அணி துணை அமைப்பாளா் சுந்தா், வழக்குரைஞா் பாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனா். முகாமிற்கான ஏற்பாடுகளை வேலூா் பேரூராட்சி செயல் அலுவலா் (பொ) வேல்முருகன், துப்புரவு அலுவலா் செல்வகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.