செய்திகள் :

தொடர் விடுமுறை: ஆம்னி பேருந்து, விமானங்களில் கட்டணம் பல மடங்கு அதிகரிப்பு!

post image

சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி தொடர் விடுமுறையை அடுத்து ஆம்னி பேருந்து மற்றும் விமானக் கட்டணங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளது.

சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை என நாளைமுதல் தொடர்ந்து மூன்று நாள்களுக்கு கல்வி நிறுவனங்களுக்கும் நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தமிழகத்தில் சென்னை, கோவை போன்ற முக்கிய நகரங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.

ரயில்கள் மற்றும் அரசு விரைவுப் பேருந்துகளில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்த நிலையில், இந்த சூழலைப் பயன்படுத்திக் கொண்டு தனியார் ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை பல மடங்கு அதிகரித்துள்ளனர்.

சென்னையில் இருந்து திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளின் கட்டணம் ரூ. 4,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளின் டிக்கெட்டுகள் ரூ. 2,000 -க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

அதேபோல், விமானங்களின் கட்டணமும் மும்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தூத்துக்குடி, கோவை செல்லும் விமானங்களின் கட்டணம் ரூ. 23,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆம்னி பேருந்து மற்றும் விமான கட்டணங்கள் அதிகரிப்பால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Omni bus and flight fares have increased following the Independence Day and Krishna Jayanti holidays.

இதையும் படிக்க : அம்பானி குடும்ப சொத்து மதிப்பு ரூ.28,00,000 கோடி! அதானி குடும்பத்தைவிட 2 மடங்கு அதிகம்

சுதந்திர தினம்: தஞ்சை பெரிய கோயிலில் தீவிர சோதனை

சுதந்திர தினத்தை முன்னிட்டு தஞ்சையில் பெரிய கோவில், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். தஞ்சை பெரிய கோயிலுக்கு வரும் பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் தீ... மேலும் பார்க்க

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று(வியாழக்கிழமை) நடைபெற்று வரும் கூட்டத்தில... மேலும் பார்க்க

விஜயகாந்த் கட்டிய மேம்பாலத்தில் விழுந்து வணங்கிய பிரேமலதா

கள்ளக்குறிச்சி ரிஷிவந்தியம் தொகுதியில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்டிய மேம்பாலத்தை விழுந்து வணங்கினார் பிரேமலதா.தமிழகம் முழுவதும் தேமுதிகவின் பிரசாரத்தை முன்னெடுக்கும் வகையில், மக்களைத் தேடி ரத யாத்... மேலும் பார்க்க

தமிழக காவல்துறையில் 21 பேருக்கு குடியரசு தலைவர் விருது! யார்யார்?

சுதந்திர தினத்தையொட்டி, தமிழக காவல்துறையில் 23 பேர் குடியரசுத் தலைவர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.சுதந்திர தினத்தையொட்டி, நாடு முழுவதும் காவல்துறையில் சிறப்பாகப் பணியாற்றி வருவோருக்கு குடிய... மேலும் பார்க்க

பாஜகவுடன் கைகோத்த தோ்தல் ஆணையம் - திமுக விமா்சனம்

பாஜகவுடன் கைகோத்து தோ்தல் ஆணையம் செயல்படுவது கவலையளிப்பதாக திமுக விமா்சித்துள்ளது. நோ்மையான முறையில் வாக்காளா் பட்டியலைச் சரிபாா்க்க வேண்டும் என்று தோ்தல் ஆணையத்தை திமுக வலியுறுத்தியுள்ளது. திமுக ... மேலும் பார்க்க

ஹுண்டாய் சாா்பில் 12 ஏக்கரில் 5,500 மரங்களுடன் குறுங்காடு

ஹுண்டாய் மோட்டாா் இந்தியா பவுண்டேஷன் சாா்பில், இருங்காட்டுக்கோட்டை சிப்காட் பகுதியில் 5,500 மரங்களுடன் குறுங்காடு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குறுங்காட்டை பாா்வையிட பள்ளி மாணவா்களுக்கு அழைப்பு விடுக்கப்... மேலும் பார்க்க