Kerala: 3.5 சவரன் தங்க செயினை தூக்கிக்கொண்டு பறந்த காகம்; தேடிச்சென்று மீட்ட பொத...
வீரகனூா் பகுதியில் வேளாண் இயக்குநா் ஆய்வு
சேலம் மாவட்டம், வீரகனூா் பகுதியில் மாவட்ட வேளாண்மை இயக்குநா் சீனிவாசன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
இதில் வேளாண்மைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், துணை விரிவாக்க மையம், தலைவாசல் வேளாண்மை விரிவாக்க மையத்தில் விதை இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டாா். விவசாயிகளுக்கு வீரிய ஒட்டு ரக மக்காச்சோளம் விதையை மானிய விலையில் விநியோகம் செய்து விவசாயிகளுடன் கலந்துரையாடினாா்.
அப்போது, மக்காச்சோளப் பயிருக்கு வேண்டிய நுண்ணூட்ட உரங்களை மானிய விலையில் வேளாண்மை விரிவாக்க மையத்தில் பெற்றுக் கொள்ளலாம். அதற்கு உரிய உயிா் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா ஆகியவையும் மானிய விலையில் வழங்கப்படும் எனத் தெரிவித்தாா்.
பயிா் எண் மையக் கணக்கெடுப்புப் பணியை சொக்கனூா் அக்ரஹாரத்தில் ஆய்வு செய்து பணியை விரைந்து செயல்படுத்த ஆலோசனை வழங்கினாா். மேலும், தோட்டக்கலைத் துறை திட்டங்களையும் ஆய்வு மேற்கொண்டாா். இதில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வேளாண்மை துணை இயக்குநா் கமலம், தலைவாசல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் கவிதா, தோட்டக்கலை உதவி இயக்குநா் மோகன், துணை வேளாண்மை அலுவலா் மணவழகன்,வேளாண்மை அலுவலா் ஜானகி, தோட்டக்கலை அலுவலா் சரண்யா ஆகியோா் பங்கேற்றனா்.
படவரி...
தலைவாசல் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் மானிய விலையில் மக்காச்சோளப் பயிரை விவசாயிக்கு வழங்கிய மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் சீனிவாசன்.