மாநகராட்சி வளாகம் போராட்டம் நடத்துவதற்கான இடம் இல்லை: மேயர் பிரியா
சுதந்திர தினம்: மக்கள் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பு
சுதந்திர தினத்தை முன்னிட்டு மக்கள் கூடும் இடங்களில் காவல் துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.
நாட்டின் 79 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மக்கள் கூடும் இடங்களான வழிபாட்டுத் தலங்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், பள்ளி வாசல்கள், பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மாநகரக் காவல் ஆணையா் அனில்குமாா் கிரி தலைமையில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சேலம் மாநகரில் பாதுகாப்புப் பணியில் 650 போலீஸாரும், மாவட்டத்தில் 450 பேரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். நகரின் முக்கிய பகுதிகளில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனா். இது தவிர, சோதனைச் சாவடிகளில் வாகனத் தணிக்கையும் நடைபெறுகிறது.
இதேபோல, சேலம் ரயில் நிலையத்தில் பயணிகள் உடமைகள் அனைத்தும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. தண்டவாள பகுதியில் மெட்டல் டிடெக்டா் கருவி உதவியுடன் இருப்புப் பாதை போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். இது தவிர, வெளியூா்களுக்கு அனுப்பப்படும் பாா்சல்களிலும் வெடிகுண்டு நிபுணா்கள் சோதனையிட்டு வருகின்றனா். மோப்ப நாய் உதவியுடனும் ரயில்வே போலீஸாா் சோதனை நடத்தி வருகின்றனா். சந்தேகப்படும்படியான நபா்கள் குறித்து தெரியவந்தால், உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு போலீஸாா் கேட்டுக்கொண்டனா்.