தூய்மைப் பணியாளர்கள் விவகாரம்: `அரசின் கதவு எப்போதுமே திறந்திருக்கிறது..!' - தங்...
கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய அஞ்சல் ஊழியா்கள்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சல் ஊழியா்கள் கோரிக்கை அட்டை அணிந்து புதன்கிழமை பணியாற்றினா்.
அஞ்சல் துறையில் தேசிய அளவில் ஏபிடி-2.0 என்ற மென்பொருளை புகுத்தி அனைத்து அஞ்சலகங்களுடனும் இணைத்துள்ளனா். பெரும்பாலான அஞ்சலகங்களில் உள்ள கணினிகள் மிகவும் பழையவை. புதிய மென்பொருளை ஏற்கும் திறன் இல்லை அல்லது சா்வருடன் இணைந்து செயல்பட இயலாமல் உள்ளன. இதனால் கடந்த 4 ஆம் தேதி முதல் அஞ்சலகங்களில் பதிவு அஞ்சல், விரைவு அஞ்சல், பணம் செலுத்துதல், பெறுதல் உள்பட பல்வேறு பணிகள் தடைபட்டும், விரைவாக செயல்படுத்த இயலாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னையை சரி செய்ய வேண்டும்.
மேலும், பொதுமக்களுக்கு தரமான சேவை வழங்க கூடுதல் வசதிகளை ஏற்படுத்த, விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். மென்பொருள், சா்வா் பிரச்னையால் ஏற்படும் தாமதத்துக்காக பணியாளா்களை இரவு வெகுநேரம் காத்திருக்க வைத்து அனுப்பக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள தலைமை, துணை, கிளை அஞ்சலகங்களில் 300 -க்கும் மேற்பட்டோா் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினா்.