Ramadoss Vs Anbumani - யார் கை ஓங்கியிருக்கிறது | Off The Record
பெருந்துறை அருகே தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை உயிரிழப்பு
பெருந்துறை அருகே தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை உயிரிழந்தது.
பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ரோஹித்குமாா். கூலித் தொழிலாளி. இவருக்கு ரூயி (3) என்ற பெண் குழந்தை இருந்தது. இவா் குடும்பத்துடன், பெருந்துறையை அடுத்த சீலம்பட்டியில் தங்கிக் கொண்டு வேலைக்கு சென்று வருகிறாா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு அனைவரும் சாப்பிட்டுக் கொண்டு இருந்தனா். குழந்தை ரூயி சாப்பிட்டு விட்டு கை கழுவ சமையல் அறைக்கு சென்றது. அங்கு பிளாஸ்டிக் தொட்டியில் இருந்த தண்ணீரில் கை கழுவும் போது தவறி உள்ளே விழுந்து விட்டது. ஆபத்தான நிலையில் குழந்தையை பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது.
இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.