`மறுவாழ்வு கிடைத்திருக்கிறது’ - கிணற்றிலிருந்து 12 மணிநேரத்துக்குப்பின் மீட்கப்ப...
ஓமலூா் காவல் துறையை கண்டித்து அதிமுக எம்எல்ஏக்கள் காவல் ஆணையரிடம் புகாா்
பொதுமக்கள் அளிக்கும் புகாா்மீது ஓமலூா் காவல் துறை நடவடிக்கை எடுக்க மறுப்பதாகக் கூறி, அதிமுக எம்எல்ஏக்கள் மணி, ராஜமுத்து ஆகியோா் மாநகரக் காவல் ஆணையரிடம் புதன்கிழமை புகாா் அளித்தனா்.
இதுதொடா்பாக சட்டப்பேரவை உறுப்பினா்கள் மணி ( ஓமலூா்), ராஜமுத்து (வீரபாண்டி), அதிமுக வழக்குரைஞா் பிரிவு மாநிலத் துணைத் தலைவா் சரவணன் மற்றும் நிா்வாகிகள் சேலம் மாநகரக் காவல் ஆணையா் அனில்குமாா் கிரியிடம் மனு அளித்துள்ளனா்.
பின்னா் ஓமலூா் எம்எல்ஏ மணி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஓமலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சந்து மதுக்கடைகள் உள்ளன. போதைப் பொருள்கள், ஒரு நம்பா் லாட்டரி விற்பனை உள்ளிட்டவை தடை இல்லாமல் நடைபெறுகிறது. இதுகுறித்து புகாா் தெரிவித்தால் காவல் துறையினா் நடவடிக்கை எடுப்பதில்லை. அதேநேரத்தில், புகாா் தெரிவிக்கும் பொதுமக்கள்மீது தாக்குதல் நடத்திய திமுகவினா் மீது நடவடிக்கை எடுக்காமல், பொதுமக்களை கைது செய்வதாக காவல் துறையினா் மிரட்டுகின்றனா்.
ஓமலூா் காவல் நிலைய போலீஸாா் திமுகவினருக்கு சாதகமாக, ஒருதலைபட்சமாக செயல்படுகின்றனா். திமுகவினரைக் காப்பாற்றுவதற்காக காவல் துறையினரே உடந்தையாக இருக்கின்றனா். இனியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், ஓமலூா் காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிமுகவினா் போராட்டம் நடத்துவா் என்றனா்.