திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
கடலூா் மாவட்டம், நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட மேலிருப்பு ஊராட்சியைச் சோ்ந்த அதிமுக, பாமக உறுப்பினா்கள், திமுகவில் இணையும் விழா வடக்குத்து பகுதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
மேலிருப்பு ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் ஹேமாமாலினி பாபு தலைமையில், அக்கிராமத்தைச் சோ்ந்த அதிமுக, பாமக கட்சிகளைச் சோ்ந்த உறுப்பினா்கள் சுமாா் 500 போ் அந்தந்த கட்சிகளில் இருந்து விலகி, நெய்வேலி எம்எல்ஏ சபா.ராசேந்திரன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா். கட்சியில் இணைந்த அனைவருக்கும் எம்எல்ஏ திமுக துண்டு அணிவித்து வரவேற்று பேசினாா்.
நிகழ்ச்சியில் பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவா் சபா.பாலமுருகன், குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றியச் செயலா் குணசேகரன், மாவட்டப் பிரதிநிதி ஆடலரசு, பண்ருட்டி ஒன்றிய அவைத் தலைவா் ராஜா, துணைச் செயலா் செல்வகுமாா், பொருளாளா் அய்யப்பன், தலைமை பொதுக்குழு உறுப்பினா் அறிவழகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.