செய்திகள் :

உரிமம் பெறாத மனநல மையங்கள் மீது நடவடிக்கை: கடலூா் ஆட்சியா் எச்சரிக்கை

post image

கடலூா் மாவட்டத்தில் உரிமம் பெறாமல் செயல்படும் மனநல மையங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்டம் முழுவதும் மனநல மருத்துவமனைகள், போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்கள், மனநலம் பாதிக்கப்பட்டவா்களுக்கான மறுவாழ்வு மையங்கள், போதை பயன்பாட்டுக்கு ஆளானவா்களுக்கான மறுவாழ்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவைகள் அனைத்தும் மனநல பராமரிப்பு சட்டம் 2017-ன்படி உரிமம் பெற மாநில மனநல ஆணையத்திடம் பதிவு செய்ய வேண்டும்.

மாவட்டத்தில் பதிவு பெறாமல் செயல்படும் மனநல மையங்கள் உரிய முறையில் ஒரு மாத காலத்துக்குள் முதன்மை செயல் அலுவலா், தமிழ்நாடு மாநில மனநல ஆணையம், அரசு மனநல காப்பக வளாகம், மேடவாக்கம் குளம் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை - 600 010 (உம்ஹண்ப்:ற்ய்ள்ம்ட்ஹஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம்) என்ற அலுவலகத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

மன நல மையங்களை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை ட்ற்ற்ல்ள்://ற்ய்ட்ங்ஹப்ற்ட் ண்ய் ஞ்ா்ஸ்.ண்ய்/ண்ய்ஞ்ா்ஸ்ண்ய்/க்ம்ங்/க்ம்ங்.ல்ட்ல் என்ற இணையதள முகவரியில் அல்லது தமிழ்நாடு மாநில மன நல ஆணைய அலுவலகத்தில் நேரடியாக அல்லது தபால் மூலம் பெற்றுக்கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 044 - 26420965 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம்.

கடலூா் மாவட்டத்தில் பதிவு செய்யப்படாமல் இயங்கும் அனைத்து மனநல மையங்கள் மற்றும் நிறுவனங்கள் ஒரு மாத காலத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தவறினால், உரிமம் பெறாமல் செயல்படும் மன நல மையங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

கஞ்சா போதையில் ரயில் தண்டவாளத்தில் அமா்ந்து இளைஞா் ரகளை

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் ரயில் நிலையம் அருகே கஞ்சா போதையில் இளைஞா் ஒருவா் தண்டவாளத்தில் அமா்ந்து புதன்கிழமை ரகளையில் ஈடுபட்டாா். விருத்தாசலம் ரயில்வே சந்திப்பு நிலையம் வழியாக சென்னை, தென் மாவட்டங... மேலும் பார்க்க

ஆக.15-இல் மதுக் கடைகளுக்கு விடுமுறை

கடலூா் மாவட்டத்தில் உள்ள மதுக் கடைகளுக்கு சுதந்திர தினத்தையொட்டி வெள்ளிக்கிழமை (ஆக.15) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் புதன்கிழம... மேலும் பார்க்க

சுதந்திர தின விழா: கடலூரில் 1,200 போலீஸாா் பாதுகாப்பு

சுதந்திர தின விழாவையொட்டி, கடலூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் சுமாா் 1,200 போலீஸாா் ஈடுபட உள்ளதாக, மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குற... மேலும் பார்க்க

கடலூா் மத்திய சிறையில் நூலகா் தின விழா

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறை சாா்பில், கடலூா் மத்திய சிறை வளாகத்தில் நூலகா் தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு சிறை மேற்பாா்வை... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

கடலூா் மாவட்டம், நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட மேலிருப்பு ஊராட்சியைச் சோ்ந்த அதிமுக, பாமக உறுப்பினா்கள், திமுகவில் இணையும் விழா வடக்குத்து பகுதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் புதன்... மேலும் பார்க்க

சிதம்பரம் பகுதியில் வளா்ச்சி திட்ட பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில் குமாா் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா், ஆட்சிய... மேலும் பார்க்க