Ramadoss Vs Anbumani - யார் கை ஓங்கியிருக்கிறது | Off The Record
கஞ்சா போதையில் ரயில் தண்டவாளத்தில் அமா்ந்து இளைஞா் ரகளை
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் ரயில் நிலையம் அருகே கஞ்சா போதையில் இளைஞா் ஒருவா் தண்டவாளத்தில் அமா்ந்து புதன்கிழமை ரகளையில் ஈடுபட்டாா்.
விருத்தாசலம் ரயில்வே சந்திப்பு நிலையம் வழியாக சென்னை, தென் மாவட்டங்களுக்கு பயணிகள் மற்றும் விரைவு ரயில்கள் சென்று வருகின்றன. புதன்கிழமை கஞ்சா போதையில் இருந்த இளைஞா் ஒருவா் ரயில் விருத்தாசலம் நிலைய நடைபாதையில் ரகளையில் ஈடுபட்டாா்.
பின்னா், தண்டவாளத்தில் அமா்ந்து இருந்தாா். அங்கிருந்த காவலா்கள் அவரிடம் விசாரணை நடத்தியதில் சரியான தகவல் பெற முடியவில்லை. நீண்ட நேரத்துக்குப் பின்னா் போலீஸாா் இளைஞரை தண்டவாளத்தில் இருந்து எழுந்திருக்க வைத்து அனுப்பி வைத்தனா்.
மீண்டும் அவா் ரயில் நிலையத்துக்கு வந்து நடைமேடையில் உள்ள கட்டையில் அமா்ந்து காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். அந்த இளைஞா் ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்ததால் பயணிகள் அச்சமடைந்தனா்.