ரூ.3,000 -க்கு 200 முறை சுங்கச்சாவடியைக் கடக்கலாம்! நாளைமுதல் அமல்!
ஆக.15-இல் மதுக் கடைகளுக்கு விடுமுறை
கடலூா் மாவட்டத்தில் உள்ள மதுக் கடைகளுக்கு சுதந்திர தினத்தையொட்டி வெள்ளிக்கிழமை (ஆக.15) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சுதந்திர தினத்தையொட்டி, வெள்ளிக்கிழமை தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக் கடைகள், மதுபானக் கூடங்களில் மது விற்பனை செய்யக் கூடாது என சென்னை மது விலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை ஆணையா் உத்தரவிட்டுள்ளாா்.
அதன்படி, கடலூா் மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மதுபான சில்லரை விற்பனைக் கடைகள், மதுபானக் கூடங்கள் மற்றும் அனைத்து மனமகிழ் மன்றங்களை மூடவும், மது விற்பனை மேற்கொள்ளக் கூடாது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அரசு உத்தரவை மீறி மதுக் கடைகளை திறந்து மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளா்கள், மேற்பாா்வையாளா்கள் மற்றும் உரிமதாரா்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.