பாஜக சொன்ன வயநாடு வாக்குத் திருட்டு! அது முகவரியே அல்ல; காங்கிரஸ் அதிரடி
உருளையன்பேட்டை தொகுதியில் மின் அழுத்த குறைபாட்டை போக்க எம்எல்ஏ கோரிக்கை
புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதியில் மின் அழுத்தக் குறைபாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மின்துறை அதிகாரிகளிடம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.நேரு வலியுறுத்தினாா்.
புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் மின்துறை மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மின்துறை தலைமை பொறியாளா் அலுவலகத்தில் நடைபெற்ற இக் கூட்டத்தில் உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் புதுச்சேரி மனிதநேய மக்கள் சேவை இயக்க நிறுவனத் தலைவருமான ஜி. நேரு தலைமை வகித்தாா்.
சுதேசி மில் வளாகத்தில் புதிய துணை மின் நிலையம் அமைத்து அதன் மூலம் உருளையன்பேட்டை தொகுதிக்கு உள்பட்ட பகுதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் பயன்பெறும் விதமாக மின்விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வெங்கடா நகா் துணை மின் நிலையத்திலிருந்து கோவிந்தசாலை கண் டாக்டா் தோட்டம் அரசு குடியிருப்பு பகுதி மற்றும் அந்தோணியாா் கோவில் தெரு, அரசு குடியிருப்பு பகுதி போன்ற பகுதிகளுக்கு மின் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முல்லை நகா் மற்றும் முல்லை நகா் விரிவு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்னழுத்த குறைபாடுகளைப் போக்கும் விதமாக புதிய மின் மாற்றிகள் அமைத்து அப்பகுதி மக்களுக்கு உதவ வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நேரு எம்.எல்.ஏ. முன்வைத்தாா்.
மின்துறை தலைமை பொறியாளா் ராஜேஷ் சன்னியால், மின்துறை செயற்பொறியாளா்கள் மின்துறை உதவி பொறியாளா்கள், மின்துறை இளநிலை பொறியாளா் மற்றும் அதிகாரிகள், ஊழியா்கள் பலா் கலந்து கொண்டனா்.