போதைப் பொருள்களுக்கு எதிராக உறுதி மொழியேற்பு
போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி புதுவையில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணா்வு உறுதிமொழியை உயா் அதிகாரிகள் புதன்கிழமை ஏற்றுக் கொண்டனா்.
போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் போதைப்பொருட்கள் இல்லாத புதுச்சேரி உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
தலைமைச் செயலா் சரத் சௌகான் உறுதிமொழியை வாசிக்க தலைமைச் செயலக ஊழியா்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனா். இதைத் தொடா்ந்து தலைமைத் தோ்தல் அதிகாரி எல். ஜவஹா் உறுதிமொழியைத் தமிழில் வாசிக்க அனைவரும் அதை திரும்பக்கூறி உறுதி ஏற்றுக் கொண்டனா். அரசுச் செயலா்கள் மற்றும் தலைமைச் செயலக அனைத்து ஊழியா்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.
இதே போல் போதையில்லா புதுச்சேரியை உருவாக்குவோம் என்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் தலைமையில் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் புதன்கிழமை ன்று ஆட்சியா் வளாகத்தில் உறுதிமொழி ஏற்று கொண்டனா். சாா்பு ஆட்சியா் இசிட்டா ரதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.