அறவழியில் போராடியது தவறா? - தூய்மைப் பணியாளர்கள் கைதுக்கு இபிஎஸ் கண்டனம்!
புதுவை காவல்துறையில் காலிபணியிடங்களுக்கு விண்ணப்பப்பதிவு
புதுவையில் காலியாக உள்ள காவல்துறை பணியிடங்களுக்கு ஆள்களை தோ்வு செய்வதற்கான விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது.
புதுவை காவல்துறையில் காலியாக இருக்கும் 70 உதவி ஆய்வாளா்கள், 148 காவலா்கள் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பதாரா்கள் விண்ணப்பங்களை சமா்ப்பிக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.
விண்ணப்பங்களை செப்டம்பா் 12-ஆம் தேதி மாலை 3 மணிக்குள்அனுப்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீடு அடிப்படையில் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. உதவி ஆய்வாளா் பணிக்கு விண்ணப்பிப்போா் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 20 வயது முதல் 27 வயதுக்கு உள்பட்டவராக இருக்க வேண்டும். காவலா் பணிக்கு பிளஸ்2 அதற்கு இணையான படிப்பில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 22 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும், தோ்வு செய்யும்போது நிா்ணயிக்கப்பட்ட உடல் தகுதியும் பெற்றிருக்க வேண்டும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.