தமிழக காவல்துறையில் 21 பேருக்கு குடியரசு தலைவர் விருது! யார்யார்?
அறிமுக நாளில் சாந்தி கோல்ட் பங்குகள் 15% உயர்வு!
புதுதில்லி: சாந்தி கோல்ட் இன்டர்நேஷனல் லிமிடெட் பங்குகள் வெளியீட்டு விலையான ரூ.199 க்கு நிகராக 15 சதவிகிதத்திற்கும் அதிகமான பிரீமியத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பட்டியலிடப்பட்டது.
பிஎஸ்இ-யில் வெளியான நிலையில், பங்கின் விலையிலிருந்து 15.12 சதவீதம் உயர்ந்து ரூ.229.10 ஆக வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையில், தொடக்க வர்த்தகத்தில் இது 14.34 சதவிகிதம் உயர்ந்து ரூ.227.55 ஆக இருந்தது. பங்கு விலை 15.26 சதவிகிதம் உயர்ந்து ரூ.229.38 ஆக முடிந்தது.
ஆரம்ப பங்கு விற்பனையில் ஒரு பங்கின் விலை ரூ.189-199 என்ற விலை வரம்பைக் கொண்டிருந்தது.
சாந்தி கோல்ட் நிறுவனம் பல்வேறு வகையான தங்க நகைகளின் வடிவமைப்பு மற்றும் உற்பத்தியில் நிபுணத்துவம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: 2.70 முறை அதிக சந்தா பெற்ற ப்ளூஸ்டோன் ஜூவல்லர்ஸ் ஐபிஓ!