செய்திகள் :

Coolie: ``இந்த மகத்தான மைல்கல்லுக்கான ஒரே ஒருவர் ரஜினி மட்டுமே" - வாழ்த்திய நடிகர் மோகன்லால்

post image

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், நாகர்ஜுனா, சத்யராஜ் உள்ளிட்ட பெரும் நடிகர் பட்டாளமே நடித்திருக்கும் கூலி திரைப்படம் நாளை வெளியாகிறது. உலகம் முழுவதும் இருக்கும் ரஜினிகாந்த் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியிருக்கும் இந்தப் படம், வெற்றிபெற வேண்டும் என பல்வேறு மொழித் திரையுலகின் நட்சத்திரங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அதே நேரம், இந்த ஆண்டுடன் நடிகர் ரஜினிகாந்தின் திரைப்பயணம் தொடங்கி 50-வது ஆண்டு நிறைவடைகிறது. இந்த சூழலில் நடிகர் ரஜினிகாந்துடன் திரையைப் பகிர்ந்துகொண்ட பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.

மோகன்லால் | Mohahlal
மோகன்லால் | Mohahlal

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 2023-ம் ஆண்டு 'ஜெயிலர்' திரைப்படம் வெளியானது. இந்தத் திரைப்படம் ரூ. 600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகமான 'ஜெயிலர் 2' படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் மேத்திவ் என்ற கேமியோ கதாபாத்திரத்தில் நடிகர் மோகன்லால் நடித்திருந்தார். இந்தக் கேமியோ ரோல் அப்போதே பலரால் பாராட்டப்பட்டது.

இந்த நிலையில், நடிகர் மோகன்லால் தன் எக்ஸ் பக்கத்தில், ``ஐம்பது வருடங்களாக திரையில் மனதை கவரும் இணையற்ற நடிப்பு, அர்ப்பணிப்பு, தன் அற்புதம் மூலம் இந்த மகத்தான மைல்கல்லுக்கான ஒரே ஒருவர் நடிகர் ரஜினிகாந்த் மட்டுமே. அவருக்கு என் வாழ்த்துகள். இன்னும் கூலி போன்ற அடையாளத் திரைப்படங்களும் வரப்போகிறது" என வாழ்த்தியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Coolie: ``உங்களுடன் திரையைப் பகிர்ந்துகொண்டதில் பெருமிதம்" - ரஜினிகாந்த் குறித்து நடிகர் மம்முட்டி!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், நாகர்ஜுனா, சத்யராஜ் உள்ளிட்ட பெரும் நடிகர் பட்டாளமே நடித்திருக்கும் கூலி திரைப்படம் நாளை வெளியாகிறது. உலகம் முழுவதும் இருக்கும் ரஜினிகாந்த் ரசிகர்களின் ப... மேலும் பார்க்க

Rajnikanth 50: ``என்னுடைய முதல் அடி உங்களுடன்தான்" - ரஜினிகாந்த் குறித்து நடிகர் ஹிருத்திக் ரோஷன்!

பாலிவுட்டில் ஹிருத்திக் ரோஷன், டைகர் ஷெராப் ஆகியோர் நடிப்பில் 2019-ம் ஆண்டு வெளியான ‘வார்’ திரைப்படம், மிகப்பெரிய வெற்றிப்பெற்று, வசூலையும் குவித்தது. இந்தப் படத்தின் தொடர்ச்சியாக ‘வார் 2’ திரைப்படத்த... மேலும் பார்க்க

Coolie: ``50 ஆண்டுகள்; ஒரே சிம்மாசனம், ஒரே மனிதர்"- வைரலாகும் அனிருத் பதிவு!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் கூலி. இந்தப் படத்தில் அமீர் கான், நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன் எனப் பெரும் ... மேலும் பார்க்க

"’கூலி’ படம் இவ்வளவு அழகாக உருவானதற்கு காரணம்...’ - ரஜினி குறித்து லோகேஷ் கனகராஜ் உருக்கமாக பதிவு!

ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கூலி’ திரைப்படம், ஆகஸ்ட் 14 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ச... மேலும் பார்க்க

Kishore: நீதிபதியின் 'இந்தியரா?' கருத்து; `தேசபக்தி என்ற போர்வையில்...' - நடிகர் கிஷோர் விமர்சனம்!

இந்திய ராணுவம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த‌தாக ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபங்கர் தத்தா, ஏ.ஜி. மாய்ஸ் அமர்வு, ``கருத்துரிமை என்ற பெயரில் எல்ல... மேலும் பார்க்க

Rajinikanth: `சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு' - மதுரையில் 5500 படங்களுடன் ரசிகர் கொண்டாட்டம்

நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு செய்ததை நினைவுகூரும் வகையில் கார்த்திக் என்ற ரசிகர் மதுரையில் அமைக்கப்பட்டுள்ள ரஜினி கோவிலில் 5,500 -க்கும் மேற்பட்ட புகைப்படங்களைக் கொண்டு அலங்கரித்து... மேலும் பார்க்க