செய்திகள் :

Kishore: நீதிபதியின் 'இந்தியரா?' கருத்து; `தேசபக்தி என்ற போர்வையில்...' - நடிகர் கிஷோர் விமர்சனம்!

post image

இந்திய ராணுவம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த‌தாக ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபங்கர் தத்தா, ஏ.ஜி. மாய்ஸ் அமர்வு, ``கருத்துரிமை என்ற பெயரில் எல்லாவற்றையும் பேச முடியாது. உண்மையான இந்தியராக இருந்தால் ராணுவத்தை விமர்சித்திருக்க மாட்டீர்கள்" என ராகுல் காந்தியை கடிந்து கொண்டனர். இது தொடர்பாக நடிகர் ஆடுகளம் கிஷோர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ``நீதியின் செய்தித் தொடர்பாளராக இருக்க வேண்டிய உச்ச நீதிமன்ற நீதிபதி, ஆளும் கட்சியின் மோசமான அரசியலின் செய்தித் தொடர்பாளராக மாறிவிட்டாரா..? சீனாவின் ஆக்கிரமிப்புக்கு ஆயிரக்கணக்கான சாட்சிகள் இருந்தபோதிலும், அவர் அரசை நோக்கி ஒரு கேள்விக் கூட கேட்கவில்லை.

நடிகர் கிஷோர்
நடிகர் கிஷோர்

அரசு மூடிமறைத்த குற்றச்சாட்டுகளுக்குப் பின்னால் உள்ள உண்மைகளைக் கண்டறிய முயற்சிக்கவில்லை. அதற்கு மாறாக அதை அம்பலப்படுத்தியவரை குறிவைக்க அவர் தேர்ந்தெடுத்த கேள்வி ``நீங்கள் ஒரு உண்மையான தேசபக்தராக இருந்தால்..." தேசபக்தி என்ற போர்வையில் தனது துரோகத்தை மறைக்கும் Non biologicals-ன் அரசியல் மொழியைப் பயன்படுத்தியிருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் துரோகத்தை அம்பலப்படுத்தும் முயற்சியில் நிற்கும் ஒரு இந்திய குடிமகனை அவதூறு செய்ய முயற்சிப்பது, உச்ச நீதிமன்றத்தின் மதிப்புக்குரிய நீதிபதி, ஆளும் கட்சி செய்த, செய்து கொண்டிருக்கும் அந்தச் செயலில் தன்னை ஒரு பங்காளியாக நிரூபித்துள்ளாரா?" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Rajinikanth: `சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு' - மதுரையில் 5500 படங்களுடன் ரசிகர் கொண்டாட்டம்

நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு செய்ததை நினைவுகூரும் வகையில் கார்த்திக் என்ற ரசிகர் மதுரையில் அமைக்கப்பட்டுள்ள ரஜினி கோவிலில் 5,500 -க்கும் மேற்பட்ட புகைப்படங்களைக் கொண்டு அலங்கரித்து... மேலும் பார்க்க

’அசௌகரியமாக இருந்த போதிலும்.!’ - கர்ப்பத்தை அறிவித்த பின் எதிர்கொண்ட சவால்கள் குறித்து ராதிகா ஆப்தே

நடிகை ராதிகா ஆப்தே தனது ஆரம்ப கர்ப்ப காலத்தில் எதிர்கொண்ட சவால்கள் குறித்தும், இந்திய திரையுலகில் உணர்ச்சியற்ற மனப்பான்மையை எதிர்கொண்டதாகவும் அவர் சமீபத்தில் ஒரு நேரலையில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.ந... மேலும் பார்க்க

ஸ்வேதா மேனன்: ஆபாச காட்சிகளில் நடித்ததாக நடிகை மீது வழக்கு - விவாதமான `அம்மா’ தேர்தல்!

கேரளாவைச் சேர்ந்தவர் மலையாள நடிகை ஸ்வேதா மேனன். இவர் சினிமாக்களிலும், விளம்பரங்களிலும் நடித்துவந்தார். இந்த நிலையில் நடிகை ஸ்வேதா மேனன் ஆபாச படங்களில் நடித்ததாகவும், பணத்துக்காக விளம்பரங்களில் நிர்வாண... மேலும் பார்க்க

Tamannaah: 'நான் விராட் கோலியைக் காதலித்தேனா?'- நடிகை தமன்னா அளித்த விளக்கம் என்ன?

பல வருடங்களுக்கு முன்பு நடிகை தமன்னாவும், விராட் கோலியும் காதலித்து வருவதாக வதந்திகள் பரவின. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இதுதொடர்பாக தமன்னா விளக்கம் அளித்திருக்கிறார். விராட் கோலி- தமன்னா``இத... மேலும் பார்க்க

Retro நாயகிகள் 14: அம்மு என்கிற ஆளுமை!

மக்களின் மனதில் ஓர் உயர்ந்த இடத்தில் இருந்த, இருக்கிற, எப்போதும் இருக்கவிருக்கிற ஒரு திரை நாயகியைப் பற்றித்தான் இந்த வாரம் தெரிந்துகொள்ளவிருக்கிறோம். அவர் அம்மு என்கிற ஜெ.ஜெயலலிதா. அம்மு என்கிற ஆளுமைப... மேலும் பார்க்க

மதன் பாப்: `முதன் முதலாக அப்போதுதான் அதை வெளியே சொன்னார்’ - மதன் பாப் குறித்து எழுத்தாளர் தமிழ் மகன்

தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கும் நடிகர் மதன் பாப் (71), நேற்றைய தினம் (ஆகஸ்ட் 2) சென்னை அடையாற்றில் உள்ள தனது இல்லத்தில் உடல் நலக் குறைவு காரணமாகக் காலமானார்.... மேலும் பார்க்க