செய்திகள் :

"’கூலி’ படம் இவ்வளவு அழகாக உருவானதற்கு காரணம்...’ - ரஜினி குறித்து லோகேஷ் கனகராஜ் உருக்கமாக பதிவு!

post image

ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கூலி’ திரைப்படம், ஆகஸ்ட் 14 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதளப் பதிவில் ரஜினிகாந்துக்கு உருக்கமான நன்றியையும், அவரது 50 ஆண்டு திரைப்பயணத்திற்கு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜின் உணர்வு பூர்வமான பதிவு

லோகேஷ் கனகராஜ் அந்த பதிவில் தெரிவித்ததாவது, ``‘கூலி’ படம் எனது திரைப்பயணத்தில் எப்போதும் சிறப்பான இடத்தைப் பிடிக்கும். இந்தப் படம் இவ்வளவு அழகாக உருவானதற்கு காரணம், தலைவர் ரஜினிகாந்த் சார் நீங்கள் தான். உங்களுடன் படப்பிடிப்பில் மற்றும் வெளியில் பகிர்ந்த உரையாடல்கள், இந்த வாய்ப்பு இவை எல்லாம் என் வாழ்நாளில் மறக்க முடியாத தருணங்கள். உங்களது 50 ஆண்டு திரைப்பயணம் எங்களை எல்லாம் காதலிக்கவும், கற்றுக்கொள்ளவும், வளரவும் தொடர்ந்து ஊக்கமளிக்கிறது. நன்றி, தலைவா!” என்று லோகேஷ் தனது பதிவில் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

ரஜினிகாந்தின் 50 ஆண்டு திரைப்பயணம்

‘கூலி’ படத்தின் வெளியீட்டுடன், ரஜினிகாந்த் தனது 50 ஆண்டு திரைப்பயணத்தைக் கொண்டாடுகிறார். 1975ஆம் ஆண்டு ‘அபூர்வ ராகங்கள்’ படத்தின் மூலம் அறிமுகமான ரஜினி, தனது தனித்துவமான நடிப்பு, ஸ்டைல் மூலம் உலகளவில் மில்லியன் கணக்கான ரசிகர்களைப் பெற்றுள்ளார். ‘கூலி’ திரைப்படம் ரஜினிகாந்தின் 171வது படமாக உருவாகியுள்ள ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் ஆகும். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த படம் நாளை வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Coolie: ``50 ஆண்டுகள்; ஒரே சிம்மாசனம், ஒரே மனிதர்"- வைரலாகும் அனிருத் பதிவு!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் கூலி. இந்தப் படத்தில் அமீர் கான், நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன் எனப் பெரும் ... மேலும் பார்க்க

Kishore: நீதிபதியின் 'இந்தியரா?' கருத்து; `தேசபக்தி என்ற போர்வையில்...' - நடிகர் கிஷோர் விமர்சனம்!

இந்திய ராணுவம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த‌தாக ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபங்கர் தத்தா, ஏ.ஜி. மாய்ஸ் அமர்வு, ``கருத்துரிமை என்ற பெயரில் எல்ல... மேலும் பார்க்க

Rajinikanth: `சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு' - மதுரையில் 5500 படங்களுடன் ரசிகர் கொண்டாட்டம்

நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு செய்ததை நினைவுகூரும் வகையில் கார்த்திக் என்ற ரசிகர் மதுரையில் அமைக்கப்பட்டுள்ள ரஜினி கோவிலில் 5,500 -க்கும் மேற்பட்ட புகைப்படங்களைக் கொண்டு அலங்கரித்து... மேலும் பார்க்க

’அசௌகரியமாக இருந்த போதிலும்.!’ - கர்ப்பத்தை அறிவித்த பின் எதிர்கொண்ட சவால்கள் குறித்து ராதிகா ஆப்தே

நடிகை ராதிகா ஆப்தே தனது ஆரம்ப கர்ப்ப காலத்தில் எதிர்கொண்ட சவால்கள் குறித்தும், இந்திய திரையுலகில் உணர்ச்சியற்ற மனப்பான்மையை எதிர்கொண்டதாகவும் அவர் சமீபத்தில் ஒரு நேரலையில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.ந... மேலும் பார்க்க

ஸ்வேதா மேனன்: ஆபாச காட்சிகளில் நடித்ததாக நடிகை மீது வழக்கு - விவாதமான `அம்மா’ தேர்தல்!

கேரளாவைச் சேர்ந்தவர் மலையாள நடிகை ஸ்வேதா மேனன். இவர் சினிமாக்களிலும், விளம்பரங்களிலும் நடித்துவந்தார். இந்த நிலையில் நடிகை ஸ்வேதா மேனன் ஆபாச படங்களில் நடித்ததாகவும், பணத்துக்காக விளம்பரங்களில் நிர்வாண... மேலும் பார்க்க

Tamannaah: 'நான் விராட் கோலியைக் காதலித்தேனா?'- நடிகை தமன்னா அளித்த விளக்கம் என்ன?

பல வருடங்களுக்கு முன்பு நடிகை தமன்னாவும், விராட் கோலியும் காதலித்து வருவதாக வதந்திகள் பரவின. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இதுதொடர்பாக தமன்னா விளக்கம் அளித்திருக்கிறார். விராட் கோலி- தமன்னா``இத... மேலும் பார்க்க