செய்திகள் :

திருப்பூரில் ரூ. 3,000 கோடி வர்த்தக பாதிப்பு! மத்திய அரசுக்கு முதல்வர் வலியுறுத்தல்!

post image

அமெரிக்காவின் வரி விதிப்பால் திருப்பூர் ஆயத்த ஆடை துறையில் ரூ. 3,000 கோடி வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆயத்த ஆடை துறையை பாதுகாக்க உடனடி நிவாரணத்தை வெளியிட வேண்டும் என்று மத்திய அரசை முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் நிறைவேறாததால், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 25 சதவீத வரி விதியை டிரம்ப் விதித்தார்.

அதைத் தொடா்ந்து, ‘உக்ரைன் மீது போா் தொடுத்து வரும் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா முன்வரவில்லை என்று குற்றஞ்சாட்டி, இந்திய பொருள்களுக்கு ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப்படும்’ என்று அமெரிக்க அதிபா் டிரம்ப் அறிவித்தாா்.

இதன்மூலம், புதன்கிழமை முதல் இந்தியா இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு மொத்தம் 50 சதவீத வரியை அமெரிக்கா விதிக்கத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு ரூ. 3,000 கோடி வர்த்தக இழப்பு நேரிடும் எனவும், இதனை ஈடுசெய்யும் வகையில் டியூட்டி டிரா பேக் சதவீதத்தை அதிகரித்தல், தொழில் கடனுக்கு வட்டி மானியம் அதிகரித்தல், அவசர கால கடன் போன்ற சலுகைகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த செய்தியை பகிர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரியால், தமிழ்நாட்டின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் பெருமளவில் பாதித்துள்ளனர். இதனால், கிட்டத்திட்ட ரூ. 3,000 கோடி வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலைகள் ஆபத்தில் உள்ளன.

நமது தொழில் மற்றும் தொழிலாளர்களைப் பாதுகாக்க உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். கட்டமைப்பு சீர்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tamil Nadu Chief Minister M.K. Stalin has said that the Tiruppur ready-made garment industry has suffered a trade loss of Rs. 3,000 crore due to the US tariff.

இதையும் படிக்க : சுங்க வரி இன்றி பருத்தி இறக்குமதி! டிச. 31 வரை நீட்டிப்பு!

ஆம்பூர் கலவர வழக்கில் தீர்ப்பு!

ஆம்பூர் கலவர வழக்கில் முதல் நான்கு வழக்குகளில் இருந்து 118 பேரை விடுதலை செய்து திருப்பத்தூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.ஆம்பூர் கலவர வழக்கில், 191 பேர் மீது மொத்தம் 12 ப... மேலும் பார்க்க

கூமாபட்டி பிளவக்கல் அணையை மேம்படுத்த ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு!

கூமாப்பட்டி பிளவக்கல் அணையில் பூங்கா மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ. 10 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.ஒரு சில மாதங்களுக்கு முன்பு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கூமாபட்டி பற்றி இன்... மேலும் பார்க்க

திமுக ஆட்சிக்கு எதிரான அவதூறுகளில் சத்தும் இல்லை; சாரமும் இல்லை: முதல்வர் மு.க. ஸ்டாலின்

அரசியல் காழ்ப்புணர்வில் திமுக ஆட்சிக்கு எதிராக அள்ளிவீசப்படும் அவதூறுகளில் சத்தும் இல்லை, சாரமும் இல்லை என மக்கள் புறந்தள்ளுவார்கள் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். 2023- 24 அறிக்கையின்படி தொழ... மேலும் பார்க்க

தனியார் நிறுவனங்களில் இனி 10 மணி நேரம் வேலை! - மகாராஷ்டிர அரசு திட்டம்

மகாராஷ்டிர மாநிலத்தில் நாள் ஒன்றுக்கு பணியாளர்களின் வேலை நேரத்தை 10 மணி நேரமாக உயர்த்த அந்த மாநில அரசு திட்டமிட்டு பரிசீலனை செய்து வருகிறது. ஒரு வாரத்திற்கு 48 மணி நேர வேலை என்ற நடைமுறைதான் தற்போது பெ... மேலும் பார்க்க

நீலகிரிக்கு ஆரஞ்சு; கோவை, திண்டுக்கல்லுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

நீலகிரி மாவட்டத்துக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.இதேபோல், கோவை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்க... மேலும் பார்க்க

சத்தீஸ்கர் வெள்ளம்: திருப்பத்தூர் குடும்பத்தினர் 4 பேர் பலி!

திருப்பத்தூர்: சத்தீஸ்கர் மழை வெள்ளத்தில் சிக்கி திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் நான்கு பேர் புதன்கிழமை பலியாகியுள்ளனர்.அவர்களின் சடலங்களை திருப்பத்தூர் கொண்டு வருவதற்கான பணிகள் தீவி... மேலும் பார்க்க