Nivetha Pethuraj: காதலரை அறிமுகப்படுத்திய நிவேதா பெத்துராஜ்; யார் அவர்?
தனது காதலரின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை நிவேதா பெத்துராஜ்.
‘ஒருநாள் கூத்து’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் நிவேதா பெத்துராஜ்.
அதன்பின் ‘டிக் டிக் டிக்’, ‘திமிரு புடிச்சவன்’, ‘சங்கத் தமிழன்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமன்றி, தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ்.
நடிப்பு மட்டுமல்லாமல் பேட்மிண்டன், ஃபார்முலா ஒன் கார் பந்தயம் போன்ற விளையாட்டுகளிலும் ஆர்வம் கொண்ட இவர், போட்டிகளிலும் பயிற்சிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நிவேதா பெத்துராஜ்.
ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
நிவேதாவின் காதலர் ரஜித் இப்ரான். மாடலிங் துறையைச் சேர்ந்த இவர், தொழிலதிபராகவும் உள்ளார் என்று கூறப்படுகிறது.
இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
எனினும், அது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் இருவரும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...