கேரளாவில் மூளையைத் தின்னும் அமீபா தொற்று; தமிழகத்திற்கு பாதிப்பு உண்டா? - அமைச்ச...
ஆர்வமூட்டும் மம்மூட்டியின் களம்காவல் டீசர்!
நடிகர் மம்மூட்டி நடித்துள்ள களம்காவல் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
’குரூப்’ படத்தின் இணை எழுத்தாளரான ஜித்தின் கே. ஜோஸ் இயக்கத்தில் நடிகர் மம்மூட்டி களம்காவல் என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ளது.
இதில், முன்னணி கதாபாத்திரத்தில் நடிகர் விநாயகனும் வில்லனாக மம்மூட்டியும் நடித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், இப்படத்தின் டீசரை இன்று வெளியிட்டுள்ளனர். விநாயகன் மற்றும் மம்மூட்டியின் காட்சிகள் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளன.