செய்திகள் :

வர்த்தக சிலிண்டர் விலை குறைந்தது! வீட்டுகளுக்கான சிலிண்டர் விலையில் மாற்றமில்லை!!

post image

நாட்டில், வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.51.50 குறைக்கப்பட்டுள்ளது. வீட்டுப் பயன்பாட்டுக்கான சிலிண்டர்கள் விலை மாற்றமின்றி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 1ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வருகிறது.

சர்வதேச சந்தை நிலவரப்படி சமையல் எரிவாயு உருளை விலை மாதந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், வர்த்தக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.51.50 காசுகள் குறைக்கப்பட்டு சென்னையில் ரூ.1738 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக சிலிண்டர்களின் விலைக் குறிப்பின் காரணமாக புது தில்லியில் ரூ.1580 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.1684 ஆகவும், மும்பையில் ரூ.1531 ஆகவும் விலை குறையும்.

அதுபோல, வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் அதாவது 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டர்களின் விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல், அதன் விலை சென்னையில் ரூ.868.50 ஆக தொடர்கிறது.

வீட்டுப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை புது தில்லியில் ரூ.853 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.852 ஆகவும், மும்பையில் ரூ.582 ஆகவும் விற்பனையாகி வருகிறது.

சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் விலை மாதம் ஒரு முறை மாற்றியமைக்கப்படுகிறது. இந்த மாதம், ஆகஸ்ட் மாதத்தை விட வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், உணவகங்கள், சிறு நிறுவனங்களுக்கான செலவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு மாநிலத்திலும் விதிக்கப்படும் வரி நிலவரத்துக்கு ஏற்ப, சிலிண்டர்களின் விலைகளும் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது.

ரஷிய அதிபர் புதினுடன் மோடி சந்திப்பு!

சீனாவில் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை காலை சந்தித்தார்.சீனாவின் துறைமுக நகரான தியான்ஜினில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) இரண்டு நாள் வருடாந்திர உச்சி மாநா... மேலும் பார்க்க

பஞ்சாப் வெள்ளம்: கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு செப். 3 வரை விடுமுறை

பஞ்சாபில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பாலிடெக்னிக் நிறுவனங்களுக்கு செப்டம்பர் 3 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாபில் உள்ள பல மாவட்டங்களி... மேலும் பார்க்க

வாரத்தின் முதல்நாள்: உயர்வுடன் தொடங்கிய பங்குச் சந்தைகள்!

இந்திய பங்குச் சந்தைகளான நிஃப்டி 50 மற்றும் பிஎஸ்இ சென்செக்ஸ் இரண்டும் வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை காலை உயர்வுடன் தொடங்கின.தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி50, 24,500 என்ற புள்ளிகளில் வர்த்தகமானது... மேலும் பார்க்க

வா்த்தகம், முதலீடு விரிவாக்கம்: இந்தியா - சீனா முடிவு!

உலகளாவிய வா்த்தகத்தை ஸ்திரமாக்கும் நோக்கில், இந்தியா-சீனா இடையிலான வா்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை விரிவாக்கவும், வா்த்தக பற்றாக்குறையை குறைக்கவும் பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் ஞா... மேலும் பார்க்க

எல்லை தாண்டிய பயங்கரவாதம்: சீன அதிபரிடம் எடுத்துரைத்த பிரதமா்!

சீன அதிபா் ஷி ஜின்பிங் உடனான பேச்சுவாா்த்தையில், எல்லை தாண்டிய பயங்கரவாத சவால் குறித்து பிரதமா் மோடி எடுத்துரைத்ததாக வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் மேலும் கூறுகையில்... மேலும் பார்க்க

தற்சார்பே வளா்ந்த இந்தியாவுக்கு வழிவகுக்கும்: பிரதமர் மோடி!

தற்சாா்புதான் வளா்ச்சியடைந்த இந்தியாவுக்கு வழிவகுக்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். எதிா்வரும் விழாக் காலங்களில் உள்நாட்டுப் பொருள்களை பெருமையுடன் வாங்க வேண்டும்; நம் வாழ்க்கைக்குத் தேவை... மேலும் பார்க்க