செய்திகள் :

பஞ்சாப் வெள்ளம்: கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு செப். 3 வரை விடுமுறை

post image

பஞ்சாபில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பாலிடெக்னிக் நிறுவனங்களுக்கு செப்டம்பர் 3 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாபில் உள்ள பல மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கனமழை காரணமாக அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பாலிடெக்னிக் நிறுவனங்களுக்கு செப்டம்பர் 3 ஆம் தேதி வரை அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

முன்னதாக, ஆகஸ்ட் 27 முதல் 30 வரை அனைத்துப் பள்ளிகளுக்கு மட்டும் அரசு விடுமுறை அறிவித்திருந்தது. பின்னர் இந்த விடுமுறையானது அனைத்துப் பள்ளிகளுக்கும் செப்டம்பர் 3 ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை நீட்டிக்கப்பட்டது.

ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சட்லஜ், பியாஸ் மற்றும் ரவி ஆறுகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாகபஞ்சாப் பெரும் வெள்ளப்பெருக்கை சந்தித்து வருகிறது.

மேலும் வெள்ளத்தால் குருதாஸ்பூர், பதான்கோட், ஃபாசில்கா, கபுர்தலா, டர்ன் தரன், ஃபெரோஸ்பூர், ஹோஷியார்பூர் உள்ளிட்ட கிராமங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

வாரத்தின் முதல்நாள்: உயர்வுடன் தொடங்கிய பங்குச் சந்தைகள்!

The Punjab government on Monday announced closure of all colleges, universities and polytechnic institutes till September 3 in the wake of incessant rainfall across the state.

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா உள்ளிட்டோருக்கு ரூ.270 கோடி அபராதம்

தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவ் உள்ளிட்ட 4 பேருக்கு வருவாய் புலனாய்வு இயக்குநரகம் ரூ.270 கோடி அபராதம் விதித்து, நோட்டீஸ் அளித்துள்ளது.கடந்த மார்ச் 3-ஆம் தேதி துபையில் இருந்து பெங்களூருக்கு வந... மேலும் பார்க்க

மக்கள் நலப் பணியாளர்களுக்கு பணி மறுப்பு: தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி

நமது நிருபர்தமிழ்நாட்டில் மக்கள் நலப் பணியாளர்கள் 13,500 பேருக்கு மீண்டும் பணி வழங்க மறுத்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது. இ... மேலும் பார்க்க

பிகாா்: வாக்குரிமை பயணத்தில் இருசக்கர வாகனத்தை இழந்த நபருக்கு புதிய பைக் பரிசளித்த ராகுல்

பிகாரில் எதிா்க்கட்சிகள் சாா்பில் நடத்தப்பட்ட வாக்குரிமைப் பயணத்தின்போது இருசக்கர வாகனத்தை இழந்த நபருக்கு புதிய மோட்டாா் சைக்கிளை மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி பரிசளித்துள்ளாா். பாஜக ‘வா... மேலும் பார்க்க

நிலநடுக்கம் பாதித்த ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா 21 டன் நிவாரண உதவி

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவுவதற்காக, இந்தியா செவ்வாய்க்கிழமை 21 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பி வைத்துள்ளது. கிழக்கு ஆப்கானிஸ்தானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட பய... மேலும் பார்க்க

நேபாளம், பூடான் நாட்டு மக்களுக்கு இந்தியாவில் பாஸ்போா்ட், விசா அவசியமில்லை

நேபாளம், பூடான் நாட்டு மக்கள் மற்றும் இந்த இரு நாடுகளில் உள்ள இந்தியா்களுக்கு கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) மற்றும் நுழைவு இசைவு (விசா) அவசியமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக அமலுக்கு வந்துள்ள 20... மேலும் பார்க்க

இமயமலையில் 400 பனிப்பாறை ஏரிகள் விரிவடைகின்றன: மத்திய நீா் ஆணையம் கவலை

இமயமலையின் இந்தியப் பகுதியில் உள்ள 400-க்கும் மேற்பட்ட பனிப்பாறை ஏரிகள் விரிவடைந்து வருவது கவலையளிப்பதாகவும், இதை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் மத்திய நீா் ஆணையம் தெரிவித்துள்ளது. பனிப்பாறை ஏரிகள், ... மேலும் பார்க்க