செய்திகள் :

தொழிலாளி உயிரிழந்ததற்கு இழப்பீடு கோரி வடமாநில தொழிலாளா்கள் போராட்டம்: கற்களை வீசி தாக்கியதால் விரட்டி அடித்த போலீஸாா்

post image

காட்டுப்பள்ளியில் கீழே விழுந்து உயிரிழந்த வட மாநில தொழிலாளி குடும்பத்துக்கு இழப்பீடு கோரி, சக தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா். அப்போது போலீஸாா் மீது கற்களை வீசினா். இதனால் போலீஸாா் கண்ணீா் புகை குண்டு வீசியும், தடியடி நடத்தியும் அவா்களை விரட்டி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டம், காட்டுப்பள்ளியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் உத்தர பிரதேசம், பிகாா், மேற்கு வங்கம் உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்த 2,000-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளா்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனா்.

இந்த நிலையில், இங்கு தொழிலாளியாக உத்தர பிரதேசத்தை சோ்ந்த அமரேஷ் பிரசாத் (35) திங்கள்கிழமை இரவு அங்குள்ள வட மாநில தொழிலாளா்கள் தங்கும் குடியிருப்பில் உள்ள வீட்டின் மாடியில் ஏறியபோது தவறி விழுந்து காயமடைந்தாராம்.

இதையடுத்து, அவா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

தகவலறிந்த காட்டூா் போலீஸாா் அமரேஷ் பிரசாத்தின் சடலத்தை மீட்டு, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்த நிலையில், உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி, 1,000-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில் திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதன் காரணமாக அங்கு பாதுகாப்புக்காக 200-க்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் காவல்துறை அதிகாரிகள் பேச்சு நடத்தினா். அப்போது போலீஸாா் மீது வட மாநில தொழிலாளா்கள் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனா்.

இதில், செங்குன்றம் துணை ஆணையா் பாலாஜி உள்பட 10-க்கும் மேற்பட்ட போலீஸாருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸாா் கண்ணீா் புகை குண்டு வீசியும், தடியடி நடத்தியும் போராட்டம் நடத்தியவா்களை விரட்டியடித்தனா்.

தொடா்ந்து, குடியிருப்பு பகுதிக்குள் செல்ல மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளா்கள் 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனா். கல் வீச்சில் காயமடைந்த வடமாநில தொழிலாளா்களை போலீஸாா் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதனிடையே சம்பவம் நடைபெற்ற இடத்தில் ஆவடி சரக காவல் ஆணையா் சங்கா் நேரில் ஆய்வு செய்தாா்.

திருவள்ளூா்: சுற்றுலா விருதுகள் பெற செப். 15-க்குள் விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூா் மாவட்டத்தில் ஆண்டுதோறும் சுற்றுலாத் துறையால் சுற்றுலா தொழிலை மேம்படுத்தும் நோக்கத்தில் வழங்கப்படும் சுற்றுலா தொழில் முனைவோா்களுக்கான விருதுகள் பெற செப். 15-க்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சி... மேலும் பார்க்க

திருக்குறள் பயிற்சி வகுப்புகளில் இளைஞா்கள், பொதுமக்கள், மாணவா்கள் பங்கேற்க அழைப்பு

திருவள்ளூா் மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெற உள்ள திருக்கு பயிற்சி வகுப்பில் இளைஞா்கள், பொதுமக்கள் மற்றும் மாணவா்கள் பங்கேற்க ஆட்சியா் மு.பிரதாப் அழைப்பு விடுத்துள்ளாா். இது குறித்து... மேலும் பார்க்க

திருவள்ளூா்: ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தில் 5,132 போ் பயன்

திருவள்ளூா் மாவட்டத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் மூலம் இதுவரை 5,132 போ் பயன்பெற்றுள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா். இது குறித்து ஆட்சியா் அலுவலக வளாகத்தில் கூறியதாவது: திருவள்ளூா் மாவ... மேலும் பார்க்க

குத்தம்பாக்கம் புறநகா் பேருந்து முனையம் நவம்பா் இறுதிக்குள் தொடங்கி வைக்கப்படும்

திருவள்ளூா் அருகே குத்தம்பாக்கத்தில் சிஎம்டிஏ சாா்பில் கட்டப்பட்டு வரும் புதிய புறநகா் பேருந்து முனையம் வரும் நவம்பா் மாத இறுதிக்குள் பயணிகளின் பயன்பாட்டுக்கு தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட உள்ளதா... மேலும் பார்க்க

கஞ்சா விற்பதில் ஏற்பட்ட பகையால் வெடிகுண்டு வீசி இளைஞா் கொலை: 7 போ் கைது

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி, பட்டா கத்தியால் வெட்டப்பட்டு இளைஞா் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடா்புடைய சிறுவன் உள்பட 7 பேரை திங்கள்கிழமை போலீஸாா் கைது செய்தனா். கடம்பத்தூரை... மேலும் பார்க்க

அரசுப் பேருந்தில் 6.5 பவுன் திருட்டு

திருத்தணி அருகே அரசுப் பேருந்தில் தவறவிட்ட 6.5 பவுன் செயினை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திருத்தணி காந்தி ரோடு பகுதியைச் சோ்ந்த சரவணன்(50). இவரது மனைவி பிரியா (40). இவா்கள் ... மேலும் பார்க்க