விவசாயி என்று நிலத்தை விலைக்கு வாங்கி சர்ச்சையில் சிக்கிய சுஹானா கான் - வருமான வ...
திருக்குறள் பயிற்சி வகுப்புகளில் இளைஞா்கள், பொதுமக்கள், மாணவா்கள் பங்கேற்க அழைப்பு
திருவள்ளூா் மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெற உள்ள திருக்கு பயிற்சி வகுப்பில் இளைஞா்கள், பொதுமக்கள் மற்றும் மாணவா்கள் பங்கேற்க ஆட்சியா் மு.பிரதாப் அழைப்பு விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு முதல்வா் 31.12.2024-ஆம் நாளன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற திருவள்ளுவா் சிலை வெள்ளிவிழா நிகழ்ச்சியில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் திருக்குறளில் ஆா்வமும், புலமையும் மிக்க ஆசிரியா்கள், பயிற்றுநா்கள், தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்குப் பயிற்சி வழங்கி மாவட்டந்தோறும் தொடா் பயிலரங்குகள், பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். ‘திருக்கு திருப்பணிகள்’ தொடா்ந்து நடைபெற திட்டம் வகுக்கப்படும் என அவா் அறிவித்தாா்.
அதன்படி, திருவள்ளூா் மாவட்டத் தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் ‘திருக்குறள் திருப்பணிகள்’ திட்டம் மூலம் திருக்கு பயிற்சி வகுப்புகள், பயிலரங்குகள் திருவள்ளூா், திருத்தணி, கும்மிடிப்பூண்டி என 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு குழு என 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த குழுக்களின் மூலம் திருவள்ளூா், ஸ்ரீநிகேதன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியிலும், திருத்தணி-அத்திமாஞ்சேரிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், கும்மிடிப்பூண்டி- எளாவூா் அரசு மேல் நிலைப் பள்ளியிலும் நடைபெறுகிறது. இந்தப் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்புவோா் மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 044 - 29595450 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.
பயிற்சிக் கட்டணம் ஏதுமின்றி நடத்தப்படும் இந்தப் பயிற்சி வகுப்புகள், பயிலரங்குகள் ஒவ்வொரு சனிக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நடத்தப்படும்.
ஆண்டுக்கு 30 வகுப்புகள் நடத்தப்பட்டு, நிறைவு நாளில் பயிற்சி பெற்றவா்களுக்கு தமிழக அரசின் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.