அதிமுக சி. விஜயபாஸ்கர் வீடு, தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்!
இங்கிலாந்து தமிழர்களின் அன்பால் அரவணைக்கப்பட்டேன்: முதல்வர் ஸ்டாலின்
ஜெர்மனி பயணத்தை முடித்துக்கொண்டு இங்கிலாந்து சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
முதல்வர் ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணமாக மேற்கொண்டுள்ளார்.
ஜெர்மனியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், மொத்தமாக 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
Setting foot in #England, I was embraced with warmth and affection, a welcome that carried the fragrance of home across distant shores.#CMStalinInEuropepic.twitter.com/qS3ROfSZbg
— M.K.Stalin (@mkstalin) September 3, 2025
தற்போது ஜெர்மனி பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் ஸ்டாலின் இங்கிலாந்தின் லண்டனுக்குச் சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
விமான நிலையத்தில் திரண்டிருந்த இங்கிலாந்து வாழ் தமிழர்கள் பலர் முதல்வர் ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். மேலும், செல்பி புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.

இங்கிலாந்தில் கால்வைத்ததும் தமிழர்களின் அன்பாலும், பாசத்தாலும் அரவணைக்கப்பட்டேன் என முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான டிஎன்ரைஸிங் முதலீட்டு இயக்கத்தின் ஒரு பகுதியாக ஜெர்மனியில் நடைபெற்ற தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் 26 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் கையெழுத்திடப்பட்டு மொத்த முதலீடுகள் ரூ.7020 கோடியாக உயர்ந்துள்ளது. இதன்மூலம், 15,320 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன.