இடுகாட்டில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விமான டிக்கெட்: நடிகருக்கு குவியும் வாழ...
நக்சல்களை ஒழிக்க மோடி அரசு உறுதி: அமித் ஷா
இந்தியாவில் அனைத்து நக்சல்களும் ஒழிக்கப்படும் வரை மோடி அரசு ஓயாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
சத்தீஸ்கரில் உள்ள கர்ரேகுட்டா மலையில் ஆபரேஷன் பிளாக் ஃபாரஸ்ட் வெற்றிகரமாக நடத்திய சிஆர்பிஎஃப், சத்தீஸ்கர் காவல்துறை, மாவட்ட ரிசர்வ் காவலர் மற்றும் கோப்ரா ஜவான்களைப் பாராட்டிய அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், இந்தியாவை நக்சல் இல்லாத நாடாக மாற்றுவதற்கு அரசு உறுதி பூண்டுள்ளது என்றார்.
அனைத்து நக்சல்களும் சரணடையும் வரை, பிடிபடும் வரை அல்லது ஒழிக்கப்படும் வரை மோடி அரசு ஓயாது என்று அவர் கூறினார்.
ஆபரேஷன் பிளாக் ஃபாரஸ்ட்டின் போது வீரர்கள் வெளிப்படுத்திய துணிச்சலும் வீரமும் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளின் வரலாற்றில் ஒரு பொன்னான அத்தியாயமாக நினைவுகூரப்படும் என்றார்.