செய்திகள் :

விருதுநகர்: 800 ஆண்டுகள் பழமையான மீனாட்சி சொக்கநாத கோயில் தேரோட்டம்; வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

post image

‎விருதுநகரில் அமைந்துள்ள 800 ஆண்டுகள் பழமையான அருள்மிகு மீனாட்சி உடனுறை சொக்கநாத சுவாமி திருக்கோயில் ஆவணி பெருந்திருவிழா திருத்தேரோட்டத்தை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வடம் பிடித்து இழுத்துத் தொடங்கி வைத்தார். ‎

விருதுநகரில் இந்து அறநிலையத்துறைக்குச் சொந்தமான 800 ஆண்டுகள் பழமையான அருள்மிகு மீனாட்சி உடனுறை சொக்கநாத சுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் திருவிழா சிறப்பாக நடைபெறும்.

இந்த ஆண்டும் இத்திருவிழா கடந்த 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து நாள்தோறும் மீனாட்சி சொக்கநாதருக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

மீனாட்சி சொக்கநாத சுவாமி கோயில் தேரோட்டம்
மீனாட்சி சொக்கநாத சுவாமி கோயில் தேரோட்டம்

இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. முன்னதாக இன்று அதிகாலை திருக்கயிலாய பஞ்ச வாத்தியங்கள் முழங்க திருத்தேரில் மீனாட்சி சொக்கநாதர் எழுந்தருள திருத்தேரை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் .ராமச்சந்திரன் வடம் பிடித்து இழுக்க ஏராளமான பக்தர்கள் தேரை இழுத்தனர்.

நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்த தேர் மீண்டும் நிலையை அடைந்தது. ‎நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராமதிலகம் ஏற்பாடு செய்திருந்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Onam: 'சின்ன சின்ன கைகள், பெரிய கொண்டாட்டங்கள்' - வத்தலகுண்டு பள்ளியில் ஓணம் பண்டிகை | Photo Album

ஓணம் மகிழ்ச்சிஓணம் மகிழ்ச்சிஓணம் மகிழ்ச்சிஓணம் மகிழ்ச்சிஓணம் மகிழ்ச்சிஓணம் மகிழ்ச்சிஓணம் மகிழ்ச்சிஓணம் மகிழ்ச்சிஓணம் மகிழ்ச்சிஓணம் மகிழ்ச்சிஓணம் மகிழ்ச்சிஓணம் மகிழ்ச்சிஓணம் மகிழ்ச்சிஓணம் மகிழ்ச்சிஓணம்... மேலும் பார்க்க

Onam: கொளத்தூர் ஜெய் கோபால் கரடியா பள்ளியில் ஓணம் கொண்டாட்டத்தில் சிறுவர் சிறுமிகள்! | Photo Album

Onam Releases Review: ஓணம் டிரீட்டாக திரைக்கு வந்திருக்கும் மலையாளப் படங்கள் எப்படி இருக்கிறது? Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEkவண... மேலும் பார்க்க

விநாயகர் சதுர்த்தி: புதுச்சேரி கடற்கரைச் சாலையில் விநாயகர் சிலை ஊர்வலம்! | Photo Album

புதுச்சேரியில் விநாயகர் சிலை ஊர்வலம்புதுச்சேரியில் விநாயகர் சிலை ஊர்வலம்புதுச்சேரியில் விநாயகர் சிலை ஊர்வலம்புதுச்சேரியில் விநாயகர் சிலை ஊர்வலம்புதுச்சேரியில் விநாயகர் சிலை ஊர்வலம்புதுச்சேரியில் விநாய... மேலும் பார்க்க

நெல்லை: களிமண், தேங்காய் நார்களில் உருவான வண்ணமயமான பிரமாண்ட விநாயகர் சிலைகள் | Photo Album

மும்பை: விநாயகர் சதுர்த்திக்கு இலவச பஸ், ரயில், உணவு; தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் போட்டிJunior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEkவண... மேலும் பார்க்க

ராஜபாளையம்: விநாயகர் சதுர்த்தி விழா துவக்கம்; பிரமாண்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் பிரசித்தி பெற்ற ஆதி வழிவிடு விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா 37 வருடங்களாக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இங்கு ப... மேலும் பார்க்க