அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்... ஹிருதயபூர்வம் பற்றி மாளவிகா!
ஹிருதயபூர்வம் படம் குறித்து நடிகை மாளவிகா மோகனன் நெகிழ்சியாகப் பதிவிட்டுள்ளார்.
கடந்த சில நாள்களாக தன் மீது பொழிந்துவரும் அன்பிற்கு நன்றி தெரிவித்து நீண்ட பதிவினை பதிவிட்டுள்ளார்.
சத்யன் அந்திகாட் இயக்கத்தில் மோகன்லால், மாளவிகா மோகனன் நடிப்பில் ஹிருதயபூர்வம் திரைப்படம் கடந்த ஆக.28ஆம் தேதி வெளியானது.
நல்ல விமர்சனங்களைப் பெற்றுவரும் இந்தப் படம் குறித்து நடிகை மாளவிகா மோகனன் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:
அன்பைப் பொழிபவர்களுக்கு நன்றி
கடந்த சில நாள்களாக என் மீது அன்பைப் பொழியும் அனைவருக்கும் நன்றி. மிகவும் அழகான வழியில் மங்கலாக இருக்கிறது. என் வாழ்க்கையில் மிகவும் சில நிகழ்வுகளில் மட்டுமே மக்கள் என்னிடம் வந்து பேசுகிறார்கள். ஏனெனில் படம் அவர்களின் இதயத்தைத் தொட்டுள்ளது.
ஹரிதாவாக எனக்கு வாய்ப்பளித்த சத்தியன் சாருக்கு நன்றி. உங்களுடன் வேலை செய்ய வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. உங்களது படங்களில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதுவதுமேல் எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. குறிப்பாக பெண் கதாபாத்திரங்களை ஆழமாக, நுட்பமாக பொலிவுடன் எழுதுவீர்கள்.
படமாக்கும்போது மிகவும் கருணையுடன், உணர்ச்சி மிகுதியுடன், சிறந்த எண்ணத்துடன் இருந்தீர்கள். அந்த அனுபவம் வெறுமனே படைப்புத்திறனை முழுமையாக்குவதுடன் மிகவும் தனிப்பட்ட முறையில் தொந்தரவு செய்வதாகவும் இருந்தது. என் வாழ்க்கையில் இந்தப் படம் அழகான வண்ணப்புத்தகமாக இருக்கும்.
பூக்கி (pookie)மோகன்லால்...
மோகன்லால் சார் ஏற்கெனவே நீங்கள் எவ்வளவு மகத்தான நடிகர் என்று தெரியும். அதைக் குறிப்பிட்டு பேசுவதே மிகவும் குழந்தைத்தனமாக இருக்கிறது. ஆனால், நீங்கள் என் மீது காட்டிய இரக்கமும் உண்மையான அக்கறையும் எனக்குள் எப்போதும் நீங்காமல் இருக்கும்.
குறிப்பாக இளம் நடிகையாக என் வழியைக் கண்டறியும்போது, நீங்கள் பொறுமையுடன் ஆதரவாக என்னை ஊக்கப்படுத்துவீர்கள். அதனால், படப்பிடிப்புத் தளம் மிகவும் அழகாக, வரவேற்பு மிகுந்ததாகவும் இருந்தது.
கடினமான நாள்களை எப்படி இலகுவாக்குவது என்பதன் நுட்பம் உங்களுக்குத் தெரியும். உங்களுடன் இப்படி அர்த்தபூர்வமான கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்குமென நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை. என் வாழ்க்கையில் மிகவும் மதிப்புமிக்க அனுபமாக முடிந்துள்ளது.
வாய்ப்புக்கு மட்டுமில்லாமல் ஓவ்வொரு முறையும் என்னிடம் கருணை, தாராள மனப்பான்மையுடன் இருந்தீர்கள். இதையெல்லாம் என்னால் வார்த்தைகளால் அடக்க முடியாது. மேலும் நீங்கள் pookie- பூக்கி (க்யூட்டாக இருப்பதைக் குறிக்கும்) ஆகவும் அழகாகவும் இருந்தீர்கள்! பூக்கி என்பது லாலுக்கு நல்ல புனைப்பெயர் அல்லவா? திரையரங்கிற்குச் சென்று படம் பாருங்கள். உங்களது இதயத்தில் சிறிய இடத்தையாவது இந்தப் படம் திருடிவிடும் எனக் கூறியுள்ளார்.
Thank you for all the love that’s been pouring in the last few days.
— Malavika Mohanan (@MalavikaM_) September 3, 2025
It’s been blurry in the most beautiful way possible ♥️
There’s been very few instances in my life where I’ve had this many people reach out to me and that’s when you know a film has touched hearts ♥️
Sathyan… pic.twitter.com/5DydML8lBl