செய்திகள் :

காலையில் கனவுகள் ஏன் வருகின்றன தெரியுமா? - பின்னால் இருக்கும் அறிவியல் காரணம் இதுதான்!

post image

காலையில் நாம் காணும் கனவுகள், நம் மனதின் ஆழமாக இருக்கும் விஷயங்களை பிரதிபலிப்பவையாக இருக்கும். காலையில் கனவுகள் ஏன் தோன்றுகின்றன, ஏன் சிலர் இவற்றை நினைவில் வைத்திருக்கின்றனர், சிலர் ஏன் மறந்துவிடுகின்றனர் என்பது குறித்த தகவல்கள் Communications Psychology இதழில் வெளியாகியுள்ளன. 18 முதல் 70 வயது வரையிலான 200-க்கும் மேற்பட்டவர்களை ஆய்வு செய்த இந்த ஆராய்ச்சியில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

காலை கனவுகள்

ஆய்வின் முடிவுகள்படி, காலை கனவுகள் பொதுவாக தூக்கத்தின் இறுதி நிலைகளில், குறிப்பாக REM (Rapid Eye Movement) தூக்கத்தின் போது தோன்றுகின்றன. இந்த நேரத்தில் மூளை சற்று சுறுசுறுப்பாக இயங்குவதால், இந்த கனவுகள் மிகவும் தெளிவாகவும் உணர்ச்சிமிக்கதாகவும் இருக்கின்றன.

இந்த கனவுகள் மூளையை ஒழுங்குபடுத்துவதற்கும், உணர்ச்சிகளைப் புரிந்துகொள்வதற்கும், எதிர்கால சூழ்நிலைகளை மனதளவில் பயிற்சி செய்வதற்கும் உதவுகின்றன. சில கனவுகள் தற்செயலானவையாகவும், புரியாதவையாகவும் இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ஆய்வின்படி, காலை கனவுகளை நினைவில் வைத்திருப்பதற்கு பல காரணிகள் உள்ளன.

கனவுகள் மீதான மனப்பான்மை

கனவுகளை முக்கியமானவையாகவோ அல்லது சுவாரஸ்யமானவையாகவோ கருதுபவர்கள் இவற்றை நினைவில் வைத்திருக்க அதிக வாய்ப்பு உள்ளது.

இளையவர்கள் பொதுவாக இதுபோன்ற கனவுகளை மிகத் தெளிவாக நினைவில் வைத்திருக்கின்றனர். வயதானவர்கள் கனவு கண்டதாக உணர்ந்தாலும் என்ன கனவு என்பதை மறந்துவிடுகின்றனர்.

காலை கனவுகளின் முக்கியத்துவம்

காலை கனவுகள் நமது உணர்ச்சி மற்றும் உளவியல் நிலைகளை பிரதிபலிக்கின்றன என்றும் இவற்றை தொடர்ந்து நினைவில் வைத்திருப்பது பிரச்னை தீர்க்கும் திறன், படைப்பாற்றல் மற்றும் சுய விழிப்புணர்வு ஆகியவற்றுடன் தொடர்புடையது என்றும் ஆய்வின் முடிவில் கூறப்பட்டுள்ளது.

காலை கனவுகள் வெறும் காட்சிகள் மட்டுமல்ல; அவை மனதின் ஆழமான செயல்பாடுகளை பிரதிபலிக்கும் விஷயங்கள் என்று கூறப்பட்டுள்ளது.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

'தெரு நாய்கள் விவகாரம்' - உங்கள் கருத்து என்ன? | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

பல முக்கிய தருணங்களில் எனக்குத் துணையாய் இருந்த நகரம் - சென்னையை ரசிக்கும் காதலி #Chennaidays

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

நமக்குள்ளே...

காதல், திருமணம், விவாகரத்து, மறுமணம் எனப் பெண்கள் தங்களது உறவுசார் முடிவுகளைத் தாங்களே எடுத்தால், கொந்தளிக்கும் குடும்பங்களும், சமூக அமைப்புகளும்தான் இங்கு வலுவாகக் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. அந்த ஆண... மேலும் பார்க்க

ஹை ஹீல்ஸ் அணிவதால் மூளை கவனச் சிதறலை ஏற்படுத்துமா? - தீர்வு கண்டறிந்த நியூரோ சயன்டிஸ்ட்!

“ஹை ஹீல்ஸ்” என்றால் அழகு, ஸ்டைல், கவர்ச்சி என்று பெண்கள் அதனை வாங்கி அணிகிறார்கள். அதே சமயம் இதனால் கால் வலி, சிரமம் ஆகியவை ஏற்படுகின்றன என்பதும் நிதர்தனம். இதற்கு தீர்வு கண்டுபிடித்துள்ளார் நியூயார்க... மேலும் பார்க்க

என்னை நெகிழ வைத்த சென்னைக்காரர்கள்! - வீண் பழிகளை சுமக்கும் சென்னை| #Chennaidays

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

29Cயை ஏக்கத்துடன் எட்டிப் பார்க்கிறேன்! - சென்னை பெண்ணின் நெகிழ்ச்சி நினைவலை | #ChennaiDays