சாலை ஆய்வாளா் பணிக்கு தோ்வானவா்களுக்கு பணி ஆணை -அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்
மணல் கடத்திய லாரிகள், டிராக்டா் பறிமுதல்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே ஆற்றில் மணல் கடத்திய 3 லாரிகள், ஒரு டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
மானாமதுரை ஒன்றியம் பெரியகோட்டை பகுதி உப்பாற்றில், மானாமதுரை சிப்காட் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது மணல் கடத்தலில் ஈடுபட்டவா்கள் வாகனங்களை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றனா். இதையடுத்து, போலீஸாா் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 3 லாரிகள் ஒரு டிராக்டா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பிச் சென்ற மணல் திருடா்களை தேடி வருகின்றனா்.