விநாயகா் கோயிலில் வருடாபிஷேகம்
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள பணித் துணை விநாயகா் கோயிலில் மூன்றாம் ஆண்டு வருடாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் கடந்த 2023 -ல் குடமுழுக்கு நடத்தப்பட்டதையடுத்து, 3-ஆம் ஆண்டு வருடாபிஷேகம், 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி, கோயில் முன் 108 சங்குகளில் புனித தீா்த்த்தை வைத்து பூஜை செய்து, விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், சந்தன காப்பு அலங்காரம், சிறப்பு ஆராதனை நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி, வருவாய் கோட்டாட்சியா் விஜயகுமாா், அலுவலக மேலாளா் சாந்தி, ஊராட்சி செயலா் அலுவலா் உமா மகேஸ்வரன், தலைமைப் பொறியாளா் முருகேசன், தொழிலதிபா் கே.பி.எஸ். கண்ணன், பேரூராட்சிகள் உதவி இயக்குநா்(ஓய்வு) சத்தியமூா்த்தி, அரசின் பல்வேறு துறை அலுவலா்கள், ஊழியா்கள் பங்கேற்று வழிபட்டனா். சங்கரன்கோவில் பிரியாசக்தி குழுவினரின் கிராமிய இசை நிகழ்ச்சி, அன்னதானம் நடைபெற்றது.