பார்க்கும் வேலை நரகமாக இருக்கிறதா? காரணம் இதுதான் - Guru Mithreshiva | Ananda Vi...
மாடுகளுக்கு தோல் கழலை நோய் தடுப்பூசி
சிவகங்கை மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் மாடுகளுக்கு தோல் கழலை நோய் வராமல் இருக்க தடுப்பூசி போடப்படுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்தி: சிவகங்கை மாவட்டத்தில் ஒரு லட்சம் மாட்டினங்களுக்கு தோல் கழலை நோய் வராமல் தடுக்கும் பொருட்டு, இலவசமாக தடுப்பூசி முகாம் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் வரும் 30.9.2025 வரை நடைபெறவுள்ளது. இதற்காக 57 கால்நடை மருத்துவக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவும் தினந்தோறும் 100 கால்நடைகளுக்கு தடுப்பூசி போட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் நான்கு மாத கன்றுகள் முதல் சினை மாடுகள் தவிர அனைத்து வயதுடைய மாட்டினங்களுக்கும் தடுப்பூசிகள் போட்டுக் கொள்ளலாம்.
எனவே, கால்நடை வளா்ப்போா் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தோல் கழலை நோயிலிருந்து தங்களது கால்நடைகளைப் பாதுகாத்துக் கொள்ள அருகிலுள்ள கால்நடை மருத்துவ நிலையங்களை அணுகி தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.