செய்திகள் :

GST 2.0: 'இனி கார், பைக் விலை 12-14% குறையலாம்; ஆனால்...' - நிபுணர் விளக்கும் சிக்கல்கள்!

post image

தற்போது அறிமுகப்படுத்தி உள்ள ஜி.எஸ்.டி 2.0-ல் மிக முக்கியமாக கவனிக்கப்படுவதில் ஒன்றில், கார், பைக் விலைகள்.

ஜி.எஸ்.டி கவுன்சிலின் லேட்டஸ்ட் அறிவிப்பின் படி,

1200 சி.சி மற்றும் 4000 மிமி தாண்டாத பெட்ரோல் மற்றும் பெட்ரோல் ஹைபிரிட், எல்.பி.ஜி, சி.என்.ஜி கார்களுக்கு ஜி.எஸ்.டி வரி 28 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதம் குறைக்கப்படுகிறது.

1500 சி.சி மற்றும் 4000 மிமி தாண்டாத டீசல் மற்றும் டீசல் ஹைபிரிட் கார்களின் ஜி.எஸ்.டி வரி 28 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதம் குறைக்கப்படுகிறது.

கார்
கார்

மூன்று சக்கர வாகனங்கள், 350 சி.சி மற்றும் அதற்கு குறைவான மோட்டர் சைக்கிள் மற்றும் பொருள்களை எடுத்து செல்லும் மோட்டர் வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி வரி 18 சதவிகிதமாக குறைக்கப்படுகிறது. முன்னர் இது 28 சதவிகிதமாக இருந்தது.

டிராக்டர்களின் ஜி.எஸ்.டி வரி 12-ல் இருந்து 5 சதவிகிதமாக குறைக்கப்படுகிறது.

டிராக்டர் டயர்கள் மற்றும் பாகங்களின் வரியும் 18-ல் இருந்து 5 சதவிகிதமாக குறைக்கப்படுகிறது.

எலெக்ட்ரிக் வாகனங்களின் ஜி.எஸ்.டி வரி 5 சதவிகிதமாகவே தொடர்கிறது.

இந்த வரி குறைப்பினால், வாகனத் துறையில் என்னென்ன மாற்றங்கள் நிகழலாம் என்பதை விளக்குகிறார் சர்வதேச மின்சார வாகன நிபுணர் வளவன் அமுதன்.

"வாகனத் துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஜி.எஸ்.டி குறைப்பு வரவேற்பிற்குரியது ஆகும்.

ஆம்புலன்ஸ், சின்ன கார்கள், டிரக்குகள், ஆட்டோ, டயர்கள், உதிரிபாகங்கள் போன்றவற்றிற்கான ஜி.எஸ்.டி வரி 28 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக மாற்றப்பட்டுள்ளது.

மேலும் வாகனங்களின் பராமரிப்பு சேவை கட்டணம் ஏற்கனவே 5% மற்றும் 12% இருந்தது. தற்போது 18% உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், நிஜ பொருள்கள் உற்பத்தி டீலர்கள், ஒர்க்ஷாப் வைத்திருப்பவர்களுக்கு கொண்டாட்டம்தான்.

இதனால், சிறிய வகை மற்றும் வணிக வாகனங்களின் விலை 12 - 14 சதவிகிதம் வரை குறையும்.

சர்வதேச பொதுபோக்குவரத்து மற்றும் மின்சார வாகன நிபுணர் வளவன் அமுதன்
சர்வதேச பொதுபோக்குவரத்து மற்றும் மின்சார வாகன நிபுணர் வளவன் அமுதன்

இன்னொரு பக்கம், டயர் உள்ளிட்ட வாகன தயாரிப்புகளின் மூலப்பொருள்களின் விலையும் குறைந்துள்ளது. இதனால், தானாக வாகனங்களின் உற்பத்தி விலையும் குறையும்.

ஆக, நுகர்வோர், உற்பத்தியாளர் என இரு தரப்பிற்கு மிகப்பெரிய போனஸ் தான் இந்த வரி குறைப்பு.

இந்த விலை குறைப்பால், வாகனங்களின் விற்பனை உடனடியாக 10 சதவிகிதம் உயரும். நீண்ட கால அடிப்படையில் 20 சதவிகிதம் வரை உயரலாம்.

ஆனால், இதில் சில சிக்கல்களும் உள்ளன.

ஜி.எஸ்.டி வரி குறைக்கப்படும்போது, வாகன உற்பத்தியாளர்கள் வாகனங்களின் விலையைக் கூட்டாமல் இருக்க வேண்டும். அப்போது தான், இந்த வரி குறைப்பின் பயனை மக்கள் முழுவதுமாக அனுபவிக்க முடியும்.

ஒருவேளை, உற்பத்தியாளர்கள் தங்களது உற்பத்திகளின் விலையைக் கூட்டிவிட்டால், மக்கள் இப்போதிருக்கும் விலைக்கு தான் தொடர்ந்து வாகனங்களை வாங்க வேண்டியதாக இருக்கும். இதை அரசாங்கம் கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தீபாவளி
தீபாவளி

பண்டிகை காலம் வேறு நெருங்கிவிட்டது. இந்த விலை குறைப்பினால், மக்கள் வாகனங்கள் வாங்க அதிகம் ஆர்வம் காட்டலாம். அதனால், உற்பத்தியாளர்கள் தங்களிடம் போதுமான வாகனங்கள் கையிருப்பில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இதில் ஜி.எஸ்.டி வரி மட்டுமே விளக்கப்பட்டுள்ளது. செஸ் வரிகள் குறித்து இன்னும் எதுவும் தெளிவாக குறிப்பிடவில்லை. அதை மத்திய அரசு விரைவில் தெளிவுப்படுத்த வேண்டும்.

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்கள் ஆட்டோமொபைல் துறையில் ஜி.எஸ்.டி வரி செலுத்துவதில் முன்னணியில் இருக்கின்றனர்.

இனி நடைமுறைக்கு வர உள்ள வரிக் குறைப்பால், இந்த மாநிலங்களின் வருவாய் குறையும் போது, நாடு முழுவதும் ரூ.48,000 கோடி வரை இழப்பு ஏற்படும் என்று மத்திய அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

இப்படி மாநில அரசுகளுக்குக் குறையும் வரி வருவாயிற்கு, மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஜி.எஸ்.டி கவுன்சில் உறுப்பினர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இந்த இழப்பீடு பின்னர் வழங்கப்படும் என்று ஜி.எஸ்.டி கவுன்சில் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு 'ஆட்டோமொபைல் ஹப்'பாக உள்ளது. இதனால், தமிழ்நாட்டிற்கு வரி இழப்புகள் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

எது எப்படி இருந்தாலும், சாதாரண மக்களுக்கு இந்த வரி குறைப்பு தமாக்கா தான்.

ஹேப்பி தீபாவளி மக்களே:)"

Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

வணக்கம்,

Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.

கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...

https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

GST 2.0: மோடியின் 'தீபாவளி கிஃப்ட்' மக்களுக்கும், மாநிலங்களுக்கும் நன்மை தருமா? - விளக்கும் நிபுணர்!

'ஒரே நாடு, ஒரே வரி' - இது தான் ஜி.எஸ்.டியின் சாராம்சம்.முன்பு, மத்திய அரசு வரி, மாநில அரசு வரி, இந்த வரி, அந்த வரி என ஏகப்பட்ட வரிகளைக் கட்ட வேண்டியதாக இருந்தது. 2017-ம் ஆண்டு, ஜூலை 1-ம் தேதி, இந்தியா... மேலும் பார்க்க

Stray Dogs Issue: `தெரு நாய்களை ஒழித்தால் நோய் வரும்...' - சீமான்

இந்தியாவில் தெரு நாய்கள் அதிகரித்து வருவது, தெரு நாய் கடி உயிரிழப்புகள் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் தெரு நாய்களுக்கு ஆதரவானவர்களும், அவற்றை எதிர்க்கும் தரப்பினரும் தங்களது வா... மேலும் பார்க்க

Dogs: `நாய்களின் உடலில் மைக்ரோ சிப்' - சென்னை மாநகராட்சியின் திட்டம் என்ன? - முழு விவரம்!

தெரு நாய்கள்:தமிழ்நாட்டின் முக்கிய பிரச்னைகளில் ஒன்றாக தெரு நாய்கள் தொல்லை, ரேபிஸ் நோய் தாக்குதல் போன்றவை கவனம் பெறத் தொடங்கியிருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே இந்த விவகாரம் விவாதக்களத்துக்குள் இருக்க... மேலும் பார்க்க

GST: "வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு...!" - மோடி, நிர்மலா சீதாராமனைப் பாராட்டும் இபிஎஸ்

2017 ஜூலை மாதத்தில் இந்தியாவில் ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தப்பட்ட போது, 5%, 12%, 18%, 28% என நான்கு வரி ஸ்லாப்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.இப்போது இந்த ஸ்லாப்கள் 5% மற்றும் 18% என இரண்டு ஸ்லாப்களாக மட்டும்... மேலும் பார்க்க

``இன்பநிதி அரசியலுக்கு வருவது திமுக-வின் உட்கட்சி விவகாரம்!" - சொல்கிறார் ஆர்.எஸ் பாரதி

"தி.மு.க ஆட்சியில் தனியார்மயம் தலைவிரித்தாடுகிறதே!" “அரசியலமைப்பின் வழிநின்று ஆட்சி நடத்த வேண்டிய ஒன்றிய பா.ஜ.க அரசு, அரசியல் எதிரிகளை பழிவாங்கிக் கொண்டிருக்கிறது. தமிழகத்துக்கு தரவேண்டிய நிதியை ஒன்றி... மேலும் பார்க்க

GST 2.0-ல் பாப்கார்ன், கிரீம் பனுக்கு எத்தனை சதவீத வரி? குட் நியூஸ் தான்!

2017-ம் ஆண்டு ஜி.எஸ்.டியை அறிமுகப்படுத்தியதிலிருந்தே, அதைக் குறித்து சர்ச்சைகள் எழுந்துகொண்டே இருந்தது.ஆனால், சமீபத்தில் ஜி.எஸ்.டி வரியில் அதிகம் கவனிக்கப்பட்ட இரண்டு சர்ச்சைகள்:ஒன்று, பாப்கார்ன்.இன்ன... மேலும் பார்க்க