ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் பிரதமர் மோடியின் அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது: மோகன் யாதவ...
முதல்வா் கோப்பை கபடிப் போட்டிகள்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை முதல்வா் கோப்பைக்கான கபடிப் போட்டிகள் நடைபெற்றன.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போட்டிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் பாரதிதாசன் தலைமை வகித்தாா். மாவட்ட விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைப்பாளா் கே.எஸ்.நாராயணன் போட்டியைத் தொடங்கி வைத்தாா். ஆண்கள் பிரிவில் 67 அணிகளும், பெண்கள் பிரிவில் 19 அணிகளும் பங்கேற்றன. ஆண்கள் பிரிவில் தெக்கூா் விசாலாட்சி கலாசாலை அணி முதலிடம், கல்லல் முருகப்பா அணி 2 -ஆம் இடம், சிவகங்கை விளையாட்டுப் பள்ளி 3 -ஆம் இடம் பிடித்தன.
பெண்கள் பிரிவில் கொல்லங்குடி அரசுப் பள்ளி முதலிடம், திருப்பத்தூா் நாகப்பா மருதப்பா பெண்கள் மேல்நிலைப் பள்ளி 2-ஆம் இடம், இடையமேலூா் அரசு மேல்நிலைப் பள்ளி 3 -ஆம் இடம் பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளும், பதக்கங்களும் வழங்கப்பட்டன. இந்தப் போட்டியில் உடல்கல்வி ஆசிரியா்கள் நடுவா்களாக செயல்பட்டனா். புரோ கபடி நடுவா் சிவநேசன், பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் ஜிம்கண்ணன், ஹரி, பள்ளி ஆசிரியா்கள் செந்தில்குமாா், பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
