2-வது ஒருநாள்: இருவர் அரைசதம்; இங்கிலாந்துக்கு 331 ரன்கள் இலக்கு!
இந்தியாவில் ஆண்டுக்கு ரூ.8 லட்சம் கோடி சூதாட்டம்..! ஷிகர் தவானிடம் அமலாக்கத்துறை விசாரணை!
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானிடம் அமலாக்கத்துறை விசாரணை விசாரித்து வருகிறது.
1எக்ஸ் பெட்டிங் எனும் சட்ட விரோதமான சூதாட்ட செயலியில் தொடர்பு இருப்பதாக இந்த விசாரணை நடைபெறுகிறது.
அமலாக்கத்துறை முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு தலைமை அலுவலகத்தில் இன்று காலை 11 மணிக்கு ஆஜர் ஆகும்படி சம்மன் அனுப்பி இருந்தது.
இதனைத் தொடர்ந்து தில்லியுள்ள இந்த அலுவலகத்திற்கு ஷிகர் தவான் காலையில் சென்றார்.
1எக்ஸ் பெட்டிங் செயலியை விளம்பரம் செய்தல், அதற்கான ஆதரவு தெரிவித்தல் தொடர்பாக அமலாக்கத்துறை அவரிடம் விசாரித்து வருகிறது.
ஏற்கெனவே, இது தொடர்பாக பல்வேறு பிரபலங்களை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. சமீபத்தில் ரெய்னாவிடமும் இது குறித்து விசாரிக்கப்பட்டது.
1,524 சூதாட்ட செயலிகள் முடக்கம்
இந்தத் தடைச் செய்யப்பட்ட சூதாட்ட செயலியில் பலரும் கோடிக்கணக்கான பணத்தை முதலீடு செய்வதாலும் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாகவும் அமலாக்கத்துறை குற்றம் சுமத்துகிறது.
22 கோடி இந்தியர்கள் விதவிதமான சூதாட்ட செயலில் ஈடுபடுகிறார்கள். அதில் பாதி (11 கோடி) பேர் தொடர்ச்சியாக ஈடுபடுவதாகவும் சமீபத்திய ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக இந்தியாவில் இருந்து 100 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 8 லட்சம் கோடி) அளவுக்கு சூதாட்டம் நடைபெறுகிறதெனவும் இதன் வளர்ச்சி ஆண்டுக்கு 30 சதவிகிதம் அதிகரிப்பதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்திய அரசு கடந்த 2022 முதல் 2025 ஜூன் வரையில் 1,524 சூதாட்ட செயலிகளை முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.