GST 2.0: மோடியின் 'தீபாவளி கிஃப்ட்' மக்களுக்கும், மாநிலங்களுக்கும் நன்மை தருமா? ...
கன்னியாகுமரியில் மேற்குக் கடற்கரைச் சாலையில் தமிழ் எண்களுடன் மைல் கல்!
கன்னியாகுமரியில் மேற்குக் கடற்கரைச் சாலை அருகே பிரிட்டிஷ் காலத்தில் வைக்கப்பட்ட எண்களும் தமிழில் எழுதப்பட்டுள்ள மைல் கல் ஒன்று யார் கவனமும் பெறாமல் சாதாரணமாக இருக்கிறது.
கன்னியாகுமரியில் கதிரவன் மறையும் காட்சி முனைக்குச் செல்லும் மேற்குக் கடற்கரைச் சாலையை இணைக்கும் அணுகுசாலையில் 'ஜோப்பா ஹவுஸ்' அருகில் இந்த பிரிட்டிஷ் காலத்தைச் சேர்ந்த மைல் கல் உள்ளது.
இந்தக் கல்லில் 'CAPE IRELAND' என்றும் ரோமன் எழுத்துருவில் 'LIV' என்றும் தமிழில் மற்றும் தமிழ் எண் உருவில் 'திருவனந்தபுரம் நாழிகை ௫௰௪' என்றும் எழுதப்பட்டுள்ளது. ௫௰௪ என்ற தமிழ் எண் '54' -யைக் குறிக்கிறது.
பிரிட்டிஷ் காலத்தில் வைக்கப்பட்ட இந்த மைல் கல் இன்னும் சேதமடையாமல் பொலிவுடன் இருக்கிறது. கன்னியாகுமரி மேற்கு கடற்கரைச் சாலையின் தொடக்கமாகவும் இந்த மைல் கல் இருக்கிறது.
இந்த அரிய மைல் கல் குறித்த தகவல்களை ஆய்வாளர்களிடம் சேகரித்து, இதுபற்றிய விவரங்களுடன் ஒரு பெயர்ப் பலகை வைத்து கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் பராமரிக்க முன்வர வேண்டும்.
இதுபோன்ற அரிய பொக்கிஷங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் இதுபற்றிப் பார்த்துப் பதிவு செய்துள்ள பொறியாளர் பா. செல்வபாண்டியன் தெரிவித்துள்ளார்.