பார்க்கும் வேலை நரகமாக இருக்கிறதா? காரணம் இதுதான் - Guru Mithreshiva | Ananda Vi...
தீவிர அரசியலில் களமிறங்கும் விஜய்! சுற்றுப்பயணம் எப்போது? எங்கு தொடங்கிறார்?
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தேர்தலையொட்டிய தனது சுற்றுப்பயணத்தை வரும் செப். 13 ஆம் தேதி திருச்சியில் தொடங்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்வைத்து அரசியல் தலைவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் தன்னுடைய சுற்றுப்பயணத்தை செப். 13 ஆம் தேதி திருச்சியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சியின் அமைப்பு ரீதியாக ஒரு நாளைக்கு இரண்டு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக, மதுரை பாரபத்தியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் விஜய் பேசியது பேசுபொருளானது.
மேலும், சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்துக்கு தூய்மைப் பணியாளர்களை அழைத்து, விஜய் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, தீவிர அரசியல் களத்தில் இறங்கினார்.
இந்த நிலையில், தவெக தலைவர் விஜய்யின் அரசியலில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: செப்.7-ல் திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கம்!