செய்திகள் :

தொடர் விடுமுறை: அதிக கட்டணம் வசூலித்தால் ஆம்னி பேருந்து பறிமுதல்!

post image

மிலாடி நபி மற்றும் தொடர் விடுமுறையையொட்டி, தனியார் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் ஆம்னி பேருந்து பறிமுதல் செய்யப்படும் என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்துத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மிலாடி நபி (செப். 5) மற்றும் தொடர் வார விடுமுறையை முன்னிட்டு பொதுமக்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகள் அதிகப்படியான கட்டணம் வசூல் செய்தால் அதனைத் தடுக்க தமிழ்நாடு முழுவதும் வட்டாரப்போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்து சோதனைச்சாவடி ஆய்வாளர்கள் ஆகியோரைக் கொண்டு சிறப்புக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

அதிகப்படியான கட்டணம் வசூல் செய்யும் மற்றும் அனுமதிக்குப்புறம்பாக இயங்கும் ஆம்னி பேருந்துகளை தீவிரமாக சோதனை செய்து அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், வாகனங்களை பறிமுதல் செய்து வரி வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: செப்.7-ல் திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கம்!

Special committee to prevent overcharging in private omni buses.

அரசுக் கல்லூரிகளில் சேர விண்ணப்பப் பதிவு நீட்டிப்பு!

அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு வசதி செப். 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அம... மேலும் பார்க்க

தீவிர அரசியலில் களமிறங்கும் விஜய்! சுற்றுப்பயணம் எப்போது? எங்கு தொடங்கிறார்?

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தேர்தலையொட்டிய தனது சுற்றுப்பயணத்தை வரும் செப். 13 ஆம் தேதி திருச்சியில் தொடங்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்வைத்து அரச... மேலும் பார்க்க

அமைச்சர் துரைமுருகனுக்கு பிடிவாரண்ட்: அமல்படுத்த உத்தரவு!

தமிழக அமைச்சர் துரைமுருகனுக்கு எதிரான பிடிவாரண்ட்டை அமல்படுத்த சென்னை சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.கடந்த 2007 முதல் 2009 வரை அமைச்சராக இருந்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 1... மேலும் பார்க்க

பாஜகவின் குரலாக மாறிவிட்டார் இபிஎஸ்: தங்கம் தென்னரசு

பாஜகவின் குரலாக மாறிவிட்டார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். நாட்டில் ஜிஎஸ்டி வரி விகிதத்தில் மாற்றம் செய்து மத்திய அரசு நேற்று(செப். 3) அறிவிப்பு வெள... மேலும் பார்க்க

அறிவியல் பூர்வமான ஆய்வுகளே சமூக மாற்றத்திற்கான வழி: விஞ்ஞானி அசோக்குமார்

திருப்பூர்: அறிவியல் பூர்வமான ஆய்வுகளே சமூக மாற்றத்திற்கான வழி என்று விஞ்ஞானி அசோக்குமார் தெரிவித்தார்.திருப்பூர் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை, வானவில் மன்றம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் காங்கேய... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி கவுன்சிலை மறுசீரமைப்புச் செய்ய வேண்டும்: இந்திய கம்யூ.

நாட்டில் ஜிஎஸ்டி கவுன்சில் ஜனநாயகப்பூர்வமாகச் செயல்படும் வகையில் மறுசீரமைப்புச் செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் கே. நாராயணா வியாழக்கிழமை கூறினார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்ச... மேலும் பார்க்க