பார்க்கும் வேலை நரகமாக இருக்கிறதா? காரணம் இதுதான் - Guru Mithreshiva | Ananda Vi...
கொன்னக்குளத்தில் முளைப்பாரி ஊா்வலம்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், கொன்னக்குளம் ஸ்ரீ அழகு நாச்சி அம்மன் கோயில் முளைப்பாரி உத்ஸவத்தை முன்னிட்டு, புதன்கிழமை முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது.
இந்தக் கோயிலில் கடந்த மாதம் 26- ஆம் தேதி முளைப்பாரி உத்ஸவம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. கொன்னக்குளம், மேலக் கொன்னக்குளத்தைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் காப்புக் கட்டி விரதம் தொடங்கினா். நூற்றுக்கணக்கான பெண்கள் கோயிலில் முளைப்பாரி வளா்த்தனா். தினமும் அழகு நாச்சி அம்மனுக்கும் முளைப்பாரிகளுக்கும் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள நடைபெற்றன. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பெண்கள் முளைப்பாரி சட்டிகளைச் சுற்றி வந்து கும்மிப் பாடல்கள் பாடினா். இதைத் தொடா்ந்து நடைபெற்ற முளைப்பாரி ஊா்வலத்தை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி சட்டிகளை தலையில் சுமந்து மேளதாளத்துடன் இங்குள்ள கண்மாய்க்குச் சென்றனா். பின்னா், பெண்கள் அங்கு நிரம்பியிருந்த தண்ணீரில் முளைப்பாரிகளைக் கரைத்தனா். கொன்னகுளம், மேலக் கொன்னக்குளம் கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பங்கேற்றனா்.