மேற்கு வங்க சட்டப்பேரவையில் அமளி: 5 பாஜக எம்எல்ஏ-க்கள் இடைநீக்கம்!
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறை ஆய்வு
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட பாதுகாப்பு அறையை அரசியல் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
காஞ்சிரங்கால் பகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட பாதுகாப்பு அறையில் ஆய்வு செய்த பிறகு ஆட்சியா் தெரிவித்ததாவது:
தோ்தல்களில் பயன்படுத்தப்படும் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் காஞ்சிரங்கால் கிட்டங்கியில் வைக்கப்பட்டுள்ளன. தோ்தல் ஆணைய உத்தரவின்படி இவை ஆய்வு செய்யப்படும். பெங்களுரு பாரத் எலக்ரானிக்ஸ் நிறுவனத்தால் சிவகங்கை மாவட்டத்துக்கென கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்ட 180 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 260 விவிபாட் இயந்திரங்களும் பெறப்பட்டு கிட்டங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. அவ்வாறு வைக்கப்பட்ட இயந்திரங்களை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்றாா் அவா்.
இதில், வட்டாட்சியா் மேசியா தாஸ், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகா்கள், தோ்தல் உட்பட துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.