GST 2.0: மோடியின் 'தீபாவளி கிஃப்ட்' மக்களுக்கும், மாநிலங்களுக்கும் நன்மை தருமா? ...
”விமானத்தில் ஏறுவதற்கு முன்பு என் சட்டையின்...”- விமான பணியாளர் மீது குற்றம்சாட்டும் பிரபல மாடல்
பிரபல மாடலான ஈவ் கேல், அமெரிக்கன் ஏர்லைன்ஸின் விமான பணியாளர் ஒருவர் தனது ஆடை குறித்து கருத்து தெரிவித்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈவ் கேல், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த சம்பவத்தைப் பற்றி பகிர்ந்துள்ளார்.
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான பணியாளரின் செயல் தன்னை அவமானப்படுத்தியதாகவும், பயணிகளின் உடைகள் குறித்து தனிப்பட்ட கருத்து தெரிவிப்பது சரியான முறையல்ல என கூறியுள்ளார். அவர் அணிந்திருந்த ஆடை, விமான நிறுவனத்தின் உடைக் கட்டுப்பாடுகளுக்கு மாறாக இருந்ததாக பணியாளர்கள் கூறியிருக்கின்றனர்.

ஈவ் இது குறித்து கூறுகையில், "நான் விமானத்தில் ஏறுவதற்கு முன், ஒரு பணியாளர் என்னை நிறுத்தி, என் சட்டையின் எல்லா பட்டனையும் போட வேண்டும் என்று கூறினார். அது எனக்கு மிகவும் அவமரியாதையாக இருந்தது. எனது ஆடை எந்த விதத்திலும் பொருத்தமற்றதாக இல்லை."
இந்த சம்பவம் தனது பயண அனுபவத்தை பாதித்ததாக அவர் கூறியிருக்கிறார்.
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் இந்த குற்றச்சாட்டு குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக பதிலளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமூக ஊடகங்களில், பலர் ஈவ் கேலுக்கு ஆதரவு தெரிவித்து, விமான நிறுவனங்கள் பயணிகளின் ஆடைகளை கட்டுப்படுத்துவது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். மறுபுறம், சிலர் விமான நிறுவனங்களின் கொள்கைகளை ஆதரித்து, பொது இடங்களில் பொருத்தமான ஆடைகள் அவசியம் என்று வாதிடுகின்றனர்.
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!