ரஷிய கச்சா எண்ணெய் மூலம் லாபம் ஈட்டவில்லை: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி
பேத்தியின் 23 வயது வகுப்பு தோழனை விரும்பும் 83 வயது மூதாட்டி - இரு குடும்பமும் ஆதரவு என நெகிழ்ச்சி!
23 வயதான இளைஞரை 83 வயதான மூதாட்டி ஒருவர் விரும்புவதாக தெரிவித்துள்ள சம்பவம், பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
கடந்த ஆறு மாதங்களாக டேட்டிங் செய்து வரும் இவர்களின் காதல் கதை எங்கிருந்து தொடங்கியது என்பது குறித்து சமீபத்தில் ஒரு ஜப்பானிய ஊடகத்தின் நேர்காணலில் பேசியிருந்ததை அடுத்து இந்த விஷயம் வெளி உலகத்திற்கு தெரியவந்துள்ளது.
சவுத் மார்னிங் போஸ்ட் செய்தியின் படி, 23 வயதான கோஃபு என்பவர் தனது வகுப்பு தோழியின் 83 வயதான பாட்டி ஐகோ என்பவர் மீது பிரியம் கொண்டுள்ளார்.

வகுப்பு தோழியின் வீட்டிற்கு முதன்முதலாக சென்றபோது இவர்களுக்கிடையே பிணைப்பு தொடங்கி இருக்கிறது. அதன் பின்னர் படிப்படியாக அது ஆழமாகியிருக்கிறது.
ஐகோவுக்கு ஒரு மகன், ஒரு மகள் மற்றும் ஐந்து பேரக்குழந்தைகள் உள்ளனர். இவர் இப்போது விவாகரத்து செய்துவிட்டு தனது மகனின் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இதற்கிடையில் தான் கோஃபு என்பவரை இவர் சந்தித்துள்ளார். அவரும் பட்டப்படிப்பு முடிக்கும் தருவாயில் உள்ளார். இருவர்களின் உறவு முதல் பார்வையிலேயே தொடங்கியதாக அவர்கள் உள்ளூர் ஊடகத்திடம் விவரித்து இருக்கின்றனர். ஆரம்பத்தில் வயது வித்தியாசம் காரணமாக தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்த தயங்கினார்களாம்.
ஆனால் எதிர்பாராத விதமாக திட்டமிடப்படாத ஒரு பயணத்தின் போது காதலை ஒப்புக்கொண்டோம் என்று அவர்கள் கூறியிருக்கின்றனர்.
அதிலும் இரு குடும்பத்தினர்களும் தங்கள் உறவை ஏற்றுக் கொண்டு முழு ஆதரவை அளித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
திருமணம் குறித்து இருவரும் முடிவு செய்யப்படவில்லை என்றும் தினமும் காலையில் எழுந்து ஐகோவின் முகத்தை பார்க்க கோஃபு விரும்புவதாக கூறியிருக்கின்றனர். இவர்களின் காதல் கதை இணையவாசிகளிடையே பெரும் அதிர்ச்சியும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!